தலையணை வைத்து தூங்குவது ஆபத்தா? யாரெல்லாம் தூங்கக்கூடாதுனு தெரியுமா?
இரவில் தலையணை இல்லாமல் தூங்குவதற்கு சிரமப்படுபவர்களுக்கான முக்கிய பதிவே இதுவாகும்.
தலையணை
இரவில் நிம்மதியான தூக்கம் கிடைத்தால் மட்டும் புதிதாக பிறக்கும் மறுநாளில், எந்தவொரு வேலையும் தடைபடாமல் இருக்கும்.
இன்று பலரும் தலையணை இல்லாமல் தூங்குவது கிடையாது. அவ்வாறு தலையணை வைத்து தூங்கினால் தான் நிம்மதியான தூக்கத்தை பெற்றதாக கருதுகின்றனர்.
ஆனால் தலையணை சற்று உயரமாக வைத்து தூங்கு உடலில் ரத்த ஓட்டத்தை சீராக வைப்பதாக கருதுகின்றனர். ஆனால் உண்மையில் தலையணை வைத்து தூங்குவது ஆரோக்கியமா? இல்லையா? என்பதை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
தலையணை இல்லாமல் தூங்குவதன் நன்மைகள்
தலையணை வைத்து தூங்கும் போது, சில நேரங்களில் மூளைக்கு சரியான இயக்கத்திற்கு துணை செய்யுமாம். ஆனால் உயரம் அதிகமாக இருந்தால், கழுத்தில் அதிர்ச்சி மற்றும் அதிக அழுத்தம் ஏற்படும். ஆதலால் தலையணை இல்லாமல் தூங்கினால் நேச்சுரல் ஸ்பைனல் அலைன்மெண்ட் பாதுகாக்கப்படும்.
அதிக உயரம் கொண்ட தலையணைகள் முதுகெலும்பை இயற்கையாக அங்குலத்தில் வைக்காமல் பாதிக்கலாம். ரத்த ஓட்டத்தை சீராக வைப்பதற்கு தலையணை இல்லாமல் தூங்குவது நல்லது.
தலையணை சருமத்தில் உள்ள எண்ணெய், அழுக்கு, பாக்டீரியாக்களை உறிஞ்சப்படுவதால், பருக்கல், தோல் ஒழுங்கின்மை போன்றவை ஏற்படும்.
தலையணை வியர்வை பிரச்சனையை ஏற்படுத்துகின்றது. இதனால் முடி கொட்டுதல், பொடுகு, தலை கொழுப்பு சேர்த்தல் அதிகரிக்கும். தலையணை இல்லாமல் தூங்கினால் முடி மற்றும் தலை தோல் ஆரோக்கியம் மேம்படும்.
உடல் இயற்கையாக நிலையான நிலையை அடையும். மூச்சு வாங்குதல் சீராக இருக்கும், குறிப்பாக Sinus பிரச்சினை உள்ளவர்களுக்கு இது நல்லது.
தலையணை இல்லாமல் தூங்குவதன் தீமைகள்
நீண்ட வருடமாக பயன்படுத்துபவர்களுக்கு தலையணை இல்லாமல் தூங்குவது கழுத்து வலி மற்றும் தலைவலி ஏற்படுத்தும்.
முதுகு நேரான நிலையில் இருக்கும் போது, சிலர் தூக்க தொந்தரவு பிரச்சினையை எதிர்கொள்ளலாம்.
தலையணை இல்லாமல் தூங்குவது, முதுகெலும்பிற்கு மிகவும் உதவியாக இருந்தாலும், இப்படி தூங்குவதற்கு நீண்ட நாட்கள் நாம் பழக வேண்டும்.
யார் தலையணை இல்லாமல் தூங்கலாம்?
கழுத்துவலி உள்ளவர்கள் தலையணை இல்லாமல் தூங்குவது, முதுகெலும்பு நேராக இருப்பதை உறுதி செய்யும்.
முதுகு வலி உடையவர்கள் தலையணை இல்லாமல் தூங்குவதால், முதுகு தசைகள் ஓய்வெடுக்கும்.
முகச்சரும பிரச்சினை உள்ளவர்கள் தலையணை தவிர்க்கலாம்.
யாருக்கு தலையணை அவசியம் ?
பக்கவாட்டாக படுத்து தூங்குபவர், முதுகு கழுத்து பகுதியில் பிரச்சனை ஏற்படாமல் இருப்பதற்கு தலையணை பயன்படுத்தலாம். தலையணை இல்லாமல் தூங்குவதும் சிரமமாகும்.
முகம் கீழே வைத்து தூங்குபவர்கள், தலையணை இல்லாமல் தூங்குவது மூச்சுப் பிரச்சினை மற்றும் கழுத்து வலியை உருவாக்கலாம். அதனால் சிறிய மென்மையான தலையணை பயன்படுத்துவது சிறந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |