குப்புற படுத்து தூங்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள்? ஆபத்து அதிகமாம்
நாம் தினமும் குப்புற படுத்து தூங்கினால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தூக்கம் என்பது ஒவ்வொரு நபருக்கும் மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது. அதே போன்று நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக படுக்கையில் படுத்து தூங்குவோம்.
சிலருக்கு குப்புற படுத்து தூங்குவது பழக்கமாகியிருக்கும். அவ்வாறு தூங்கினால் தான் தூக்கமும் வரும். ஆனால் நமது பெரியோர்கள் குப்புற படுத்து தூங்கக்கூடாது என்று கூறுவதை நாம் கேள்விப்பட்டிருப்போம்.
அந்த வகையில் குப்புற படுத்து தூங்கினால் என்னென்ன தீமைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தீமைகள் என்ன?
குறட்டைவிடுவதை குறைப்பதற்கு குப்புற படுத்து தூங்குவது உதவினாலும், பல எதிர்மறையான விளைவுகளையும் உடம்பில் ஏற்படுத்துகின்றது.
இவை பெரியவர்களுக்கு மட்டுமின்றி, சிறு குழந்தைகளுக்கு உயிரிழப்பு வரை ஏற்படும் என்று ஆய்வில் கூறப்படுகின்றது.
குப்புற படுத்து தூங்குவது, முதுகு மற்றும் கழுத்துப்பகுதியில் அழுத்தத்தினைக் கொடுப்பதுடன், காலையில் முதுகுவலி, தசை பிடிப்பு போன்ற தொந்தரவுகளை ஏற்படுத்தும்.

மேலும் இவ்வாறு படுத்து உறங்குவதால் முதுகு தண்டு ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கின்றது. வயிற்றினை அமுக்கிக் தூங்கும் போது, முதுகு தண்டு வளைந்து சீரான அமைப்பில் மாற்றம் ஏற்பட்டு முதுகுவலிக்கு காரணமாகின்றது.
தூங்கும் போது மூச்சுவிடுவதற்கு கழுத்தை ஒருபக்கமாக திருப்பி படுக்கும் நிலை காணப்படும். ஆதலால் இவை கழுத்துவலியை ஏற்படுத்தும்.
கழுத்துவலி மட்டுமின்றி தலைவலி, தோள்பட்டை வலி மற்றும் கைவலி போன்ற பிரச்சனையையும் கொண்டு வரும். மேலும் மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜனில் தடை ஏற்படும். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் குப்புற படுத்து தூங்குவது கூடாது.

முதுகை தரையில் வைத்து மேல் நோக்கி மல்லாந்து படுக்கும் போது அதிக ஆரோக்கிய நன்மையினையும், குறைவான அளெகரியங்களையும் கொடுக்கின்றது.
பக்கவாட்டில் அல்லது மல்லாந்து படுக்கும் பழக்கத்திற்கு மாறியவர்கள் முதுகுவலி குறைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
குப்புற படுத்து தூங்கி பழகியவர்கள், தலையணை ஒன்றினை வயிற்றுப்பகுதியின் அருகில் வைத்துக்கொண்டு பக்கவாட்டில் தூங்குவதன் மூலமாக கொஞ்சம் கொஞ்சமாக பழக்கத்தினை மாற்றலாம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |