100 சதவீதமானோர் பயனடைந்த சரும பெலிவிற்கான அழகுக்குறிப்புக்கள்...
பெண்கள் அழகாக இருப்பதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் நேரத்தை செலவு செய்கின்றனர்.
செலவு செய்யும் அந்த நேரத்தை கொஞ்சம் பயனுள்ளதாக எப்படி மாற்றலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இதற்காக நீங்கள் வீட்டில் காணப்படும் சமயலறை பொருட்களை உபயோகித்தால் போதும். இந்த வீட்டு அழகுக்குg்பொருட்கள் மூலம் முகம் பளீச் என்று காணப்படுகின்றது.
சரும பொலிவு
நீங்கள் தினமும் கட்டாயமாக குளிப்பீர்கள் அப்படி குளிக்கும் போது அரை மணி நேரத்திற்கு முன்னர் சிறிதளவு பாதாம் எண்ணெய்யை முகத்தில் தடவி மசாஜ் செய்து கொஞ்ச நேரத்தின் பின்னர் குளிக்க வேண்டும். இப்படி செய்தால் நாளடைவில் சருமம் பொலிவு பெறும்.
இரவில் உறங்க செல்வதற்கு முன்னர் சிறிதளவு உருளைக்கிழங்கு சாறை முகத்தில் தடவி மசாஜ் செய்துவிட்டு 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இவ்வாறு ஒவ்வொரு நாளும் செய்து வந்தால் முகத்தில் உள்ள கருவளையம் நீங்கி முகம் அழகாக காணப்படும்.
ஒரு கைப்பிடி புதினா இலையை விழுதாக அரைத்து சாறு பிழிந்து அதனுடன் சிறிதளவு கடலை மாவு சேர்த்து குழைத்து முகத்தில் பூசவும்.
15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிவிட வேண்டும். இதனால் மகத்தில் படிந்துள்ள அழுக்குகள் நீங்கி ஒரு புதிய அழகை கொடுக்கும். கற்றாழை ஜெல்லுடன் அதே அளவு தேன் கலந்து பூசி வர, முகச்சுருக்கம் நீங்கும்.