Onion Peel: வெங்காயம் உறிச்சா தோலை இனி குப்பையில் போடாதீங்க
வீட்டு சமையலில் அதிகமாக பயன்படும் வெங்காயம், இவற்றின் தோல்களை நம்மில் பலரும் குப்பையில் தான் போடுவதுண்டு. ஆனால் அதன் நன்மைகளை இங்கு தெரிந்து கொள்வோம்.
வெங்காய தோல்
சமையலுக்கு வெங்காயம் எவ்வளவு முக்கியத்துவமானதாகவும், சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கின்றதோ அதே போன்று அதன் தோலிலும் எண்ணற்ற சத்துக்கள் மற்றும் நன்மைகள் இருக்கின்றது.
வெங்காய தோல்கள் உண்மையில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. எனவே வெங்காயத் தோல்கள் நல்ல செரிமானத்திற்கு உதவுவதோடு, குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகின்றன.
வெங்காயத் தோல்களில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, கால்சியம் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட வைட்டமின்ஸ் & மினரல்ஸ் நிறைந்துள்ளன.
நன்மைகள் என்ன?
வெங்காய தோலில் குவெர்செடின் போன்ற அதிகளவு ஃபிளாவனாய்ட்ஸ் உள்ள நிலையில், அதிக அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளை கொண்டிருக்கின்றன. இவை இதய நோய் மற்றும் கேன்சர் வராமல் தடுக்கின்றது. மேலும் அழற்சியை குறைக்கவும் செய்கின்றது.
வெங்காயத் தோலில் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், சரும எரிச்சலில் இருந்து நிவாரணம் கொடுக்கின்றது. குறிப்பாக சருமத்தில் ஏற்படும் சிவப்பை குறைக்கவும், காயங்களை விரைவாக ஆற்றவும் செய்கின்றது.
வெங்காய தோலில் இருந்து எடுக்கப்படும் சாறுகள் கூந்தல் பராமரிப்புப் பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றது. மேலும் இவை மயிர்க்கால்களை வலுப்படுத்தவும், முடி உதிர்வை குறைத்து வளர்ச்சியையும் அதிகரிக்கின்றது. தலைமுடியை அலசவும் வெங்காய சாறை பயன்படுத்தலாம்.
குடல் இயக்கத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதுடன், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலை தடுக்கின்றது.. வெங்காய தோலை டீ-யாக போட்டு குடிப்பதன் மூலம நல்ல பலன் பெறலாம். உங்கள் டயட்டிலும் சேர்த்து கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |