முகம் கண்ணாடி போல் ஜொலிக்கணுமா? அப்போ தூங்குவதற்கு முன்னால் இதை பண்ணுங்க
பொதுவாகவே அனைவருக்கும் அழகாக இருக்க வேண்டும் என்று தான் ஆசை. குறிப்பான பெண்களுக்கு சருமத்தை பராமரிக்கும் விடயத்தில் அதிக அக்கறை இருக்கும்.
இதற்காக அதிகமாக பணத்தையும் நேரத்தையம் செலவிடும் பெண்கள் தான் அதிகம். ஆனால் கடைகளில் கிடைக்கும் ரசாயனம் கலந்த சரும பராமரிப்பு பொருட்களை வாங்கி பயன்படுத்துவது சரும ஆரோக்கியத்துக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.
சருமத்தில் ஏற்படும் முகப்பருக்கள் மற்றும் கருவளையம் வறட்சி போன்ற அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் வீட்டிலேயே எளிதாக தயாரிக்கப்படும் ஃபேஸ் பேக்கை பயன்படுத்த முடியும்.
இவ்வாறு வீட்டில் தயாரிக்கும் ஃபேஸ் பேக் எந்த பக்கவிளைவும் இல்லாமல் சருமத்தை இயற்கை முறையில் பராமரிக்க துணைப்புரியும்.
இதனை வீட்டிலேயே தயாரிப்பதால் செலவும் குறைவாகவே இருக்கும். சருமத்துக்கு ஆரோக்கியமாக முறையில் அழகு சேர்க்கும் இயற்கை ஃபேஸ் பேக் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
ஃபேஸ் பேக் தயாரிக்கும் முறை
கற்றாழை சருமத்திற்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கின்றது. கற்றாழையில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் முகப்பரு, சரும எரிச்சல் மற்றும் சரும வறட்சி போன்ற அனைத்து சரும பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கும்.
இரண்டு டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை ஒரு டீஸ்பூன் மஞ்சள் பொடி மற்றும் இரண்டு டீஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலத்து அந்த ஃபேஸ் பேக்கை முகம் முழுவதும் நன்றாக தடவ வேண்டும்.
இதனை 15 முதல் 20 நிமிடங்களுக்கு நன்றாக காயவிட்டு பின்னர் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகம் உடனடி பொலிவு பெரும். இதனை தொடர்ச்சியாக செய்வு வர அனைத்து விதமான சரும பிரச்சினைகளுக்கும் நீங்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |