இந்த பிரச்சினைகள் இருக்கா? அப்போ பீட்ரூட்டை தவறியும் சாப்பிடாதீங்க
பொதுவாகவே பீட்ரூட்டின் சிறந்த நிறமும் இனிப்பு சுவையும் அனைவருக்கும் பிடிக்கும். ஊட்டச்சத்துக்கள் செரிந்து காணப்படும் இந்த காய் ஒரு வேர் காய்கறி ஆகும்.
பொதுவாக பீட்ரூட் இனிக்கும் என்பதால் குழந்தைகளுக்கும் இது மிகவும் பிடிக்கும். நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் பீட்ரூட்டை வெவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் எடுத்துக்கொள்வார்கள்.
சிலர் சாலட் வடிவிலும் சிலர் பொரியல் செய்தும், இன்னும் சிலர் ஜூஸ் மூலமாகவும் பீட்ரூட்டை எடுத்துக்கொள்வார்கள்.
பீட்ரூட்டில் பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம், வைட்டமின் பி6, வைட்டமின் பி9, வைட்டமின் சி, பீடைன் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது.
பீட்ரூட்டில் இருக்கும் ஃபோலேட் ரத்த சோகை பிரச்சினை, இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைப்பதுடன் ரத்த நாளங்களுக்கு ஏற்படும் சேதத்தை கட்டுப்படுத்துவதிலும் பெரிதும் துணைப்புரிகின்றது.
இவ்வாறு பல்வேறு நன்மைகள் நிறைந்த பீட்ரூட் சில நோய்தாக்கம் உள்ளவர்களுக்கு பாதக விளைவை ஏற்படுத்தும் எனவே யாரெல்லாம் பீட்ரூட் சாப்பிட கூடாது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
யார் பீட்ரூட்டை தவிர்க்க வேண்டும்
பீட்ரூட் ரத்த நாளங்களை விரிவடைய செய்யும் தன்மை கொண்டது. எனவே உயர் ரத்த அழுத்த பிரச்சினையுள்ளவர்கள் பீட்ரூட் சாப்பிட்டால் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்டிகொள்ளலாம்.
ஆனால் குறைந்த ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடுவதால் மேலும் தீவிரமான பாதக விளைவை ஏற்படுத்தும்.
பீட்ரூட்டில் ஆக்சலேட் எனும் வேதிப்பொருள் அதிகமாக இருப்பதால் சிறுநீரகம் உள்ளிட்ட உள்ளுறுப்புகளில் காணப்படும் கற்கள் பிரச்சினையை அதிகரிக்க வழிவகுக்கும். எனவே இந்த பிரச்சினையுள்ளவர்கள் பீட்ரூட் சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்வது சிறந்தது.
மேலும் அலர்ஜி பிரச்சினை உள்ளவர்கள் பீட்ரூட் சாப்பிடுவது அவர்களது அலர்ஜி பிரச்சனையை அதிகப்படுத்த கூடும் எனவே அலர்ஜி இருப்பவர்கள் பீட்ரூட் சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்வது சிறந்தது.
பீட்ரூட்டில் அதிக கிளைசெமிக் இன்டெக்ஸ் உள்ளதால் இதை சாப்பிடுபவர்களின் உடலில் ரத்த சர்க்கரை அளவை கணிசமாக அதிகரிக்கும்.
எனவே நீரிழிவு நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். அப்படியும் சாப்பிட விரும்பினால் மருத்துவ ஆலோசனையின் பின்னர் சாப்பிடுவதே நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |