தங்கம் இளமையை தக்க வைக்கிறதாம்... அதுதான் இவ்வளவு டிமாண்டா?
பொதுவாகவே பெண்களை பொருத்தவரையில் தங்கத்தின் மீது அதிக ஈடுபாடு இருக்கும். தங்கம் என்ற வார்த்தையிலேயே ஏதோ மேஜிக் இருக்கின்றது. சாதனையின் சின்னங்களாகவும் பெருமதியின் உச்சத்திலும் இருப்பது தங்கம்.
தங்கம் பொருளாதாரத்தில் மட்டுமல்லாது மருத்துவத்திலும் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. தங்கம் சரும அழகை மேம்படுத்துவதில் தனியிடம் வகிக்கின்றது. சரும ஆரோக்கியத்திற்கு தங்கம் எவ்வாறு துணைப்புரிகின்றது என்பது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
இளமையை காக்குமா?
தங்கம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். வயதாவதை எதிர்க்கும் பண்புகளும் தங்கத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆரோக்கியமான, இளமை தோற்றம் கொண்ட சருமத்திற்கு அவசியமான கொலாஜன் உற்பத்தியைத் தூண்டுவதற்கு தங்கம் பெரிதும் துணைப்புரிகின்றது.
தங்கம் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களின் தோற்றத்தைக் குறைக்க உதவும். சரும பொலிவை அதிகரிக்க விரும்புவோருக்கு ஒரு சிறந்த தேர்வாக தங்கம் அமைகிறது.
தங்கத்தை பிரதான மூலப்பொருளாக கொண்டு எத்தைனையோ சரும பாதுகாப்பு பொருட்கள் மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
தங்கம் மன ஆரோக்கியத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது. தங்க நகைகளை அணிவது மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்கவும், மனநிலையை மேம்படுத்தவும், நேர்மறை மற்றும் மகிழ்ச்சியின் உணர்வுகளை அதிகரிக்கவும் உதவும்.
மனநிலை நன்றாக இருக்கும் பச்சத்தில் முகம் தானாகவே பொலிவாக காணப்படும். மேலும் தங்கத்தை அணிந்தால் சரும அழகு அதிகரிக்கும் என்று ஆய்வுகளும் குறிப்பிடுகின்றன. தொன்றுதொட்டு தங்கம் அழகு கலையில் பயன்பத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |