உங்கள் வெள்ளை சருமம் பொலிவிழந்து இருக்கா? இந்த பருப்பில் செய்த பேஸ் பெக் போட்டு பாருங்க
நமது அழகை நாம் தான் பராமரிக்க வேண்டும். இதற்காக நாம் முன்னோர்களின் அறிவுரையை பின்பற்றுவது நல்லது. ஆனால் அதிகம் பேர் இதை கடைபிடிப்பது குறைவு.
அப்படியானவர்களுக்கு முகத்தில் வறட்சி பருக்கள் என இன்னும் பல பிரச்சனைகள் வரக்கூடும். தற்போது வெயில் மழை என என்ன காலம் மாறினாலும் அதற்கேற்ற வகையில் நம் சருமத்தை நாம் பராரிக்காவிட்டால் அது தன் பொலிவை இழந்து சரும அழகை மங்கச்செய்யும்.
இதற்கு வீட்டில் இருக்கும் உளுத்தம் பரும்பு மிகவும் உதவியாக இருக்கும். உளுத்தம் பருப்பில் சில பொருட்களை சேர்த்து பயன்படுத்துவது பொலிவை மீட்டு தரும். இதை இந்த பதிவில் பாாக்கலாம்.
சரும பொலிவு
சரும பொலிவை இழப்பாக காட்டுவது நமது முகத்திலுள்ள தேவையற்ற முடி தான். இதை முதலில் அகற்ற வேண்டும் அதற்கு முகத்தில் வளரும் முடிகளைப் போக்க கோதுமை மாவு - 2 டேபிள் ஸ்பூன்,தயிர் அல்லது பால் - 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,தண்ணீர் - தேவையான அளவு இவை அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி 10-15 நிமிடம் காய வைக்க வேண்டும்.
பின்பு கைகளை நீரில் நனைத்து, பின் மென்மையாக ஸ்க்ரப் செய்ய வேண்டும். இப்படி செய்யும் போது சருமத்தில் உள்ள முடிகள் மென்மையாக நீங்கும்.
முகத்தின் பொலிவை மீட்டு தர உளுத்தம் பருப்பு உதவியாக இருக்கும். உளுத்தம் பருப்பு பவுடர் - 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை எலுமிச்சை சாறு - சிறிது தண்ணீர் - சிறிது எடுத்து ஒரு பாத்திரத்தில் மிகஸ் செய்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இது தவிர இன்னுமொரு மறையிலும் உளுத்தம் பருப்பை வைத்து பெக் செய்யலாம். அதற்கு வாழைப்பழம் - 1/2 உளுத்தம் மாவு - 1 டேபிள் ஸ்பூன் தேன் - சில துளிகள் இதை ஒரு சிறிய பாத்திரத்திரத்தில் கலந்து முகத்தில் தடவி 10
நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இவற்றை வாரம் இரண்டு முறை செய்து பாருங்கள் வித்தியாசத்தை உணருவீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |