கோதுமை மாவுடன் இதை சேர்த்து வாரத்திற்கு 2 முறை போடுங்க- முகம் நிலா போல ஜொலிக்கும்
சருமத்தின் அழகில் பல பிரச்சனைகள் இருந்தால் அதை இல்லாமல் செய்வதற்கு கோதுமை மா பேஸ் பெக் மிகவும் உதவியாக இருக்கும்.
பேஸ் பெக்
தற்போது இருக்கும் வேலை காரணமாக நமது சருமம் பொலிவிழந்து காணப்படுகன்றது. இதற்கு இரசாயன பொருட்கள் யன்படுத்துவதன் மூலம் உடனடியாக ரிசல்ட் கிடைத்தாலும் அது காலப்போக்கில் பல விளைவுகளை கொண்டு வரும்.
இதை எல்லாம் தவிர்த்து வீட்டில் கோதுமை மாவு இருந்தால் அதில் இருந்து தயாரிக்கும் பேஸ் பெக்கே முகத்தை ஜொலிக்க செய்யும்.
இதற்கு கோதுமை மாவு 2 டேபிள் ஸ்பூன், இன்ஸ்டன்ட் காபி பவுடர் 2 டேபிள் ஸ்பூன், தயிர், அரை தக்காளி ஜூஸ் இந்த அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து தண்ணீரும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
இந்த பேக்கை குளிர்சாதன பெட்டியில் மூன்று நாட்கள் வரை சேமித்து வைத்து வாரத்திற்கு இரண்டு முறை மட்டும் போட்டு வந்தால் நான்கு வாரத்தில் வித்தியாசத்தை நீங்கள் உணரலாம். முகத்தில் இருக்கும் பருக்கள் மற்றும் முகத்துளைகள் மறைந்து பொலிவான சருமத்தை இது பெற்று தரும்.
பொருட்களின் பயன்
1.கோதுமை மாவு சருமத்தை பிரகாசமாக்கி, அழுக்குகளை நீக்கி, பளபளப்பைத் தருகிறது. இது சரும கருமையையும் நீக்க உதவுகிறது. சரும பொலிவை மீட்டு தருகிறது.
2.காபியில் உள்ள காஃபின், சருமத்திற்கு இளமையான தோற்றத்தைத் தரும். இது கருவளையங்களை நீக்கி, சருமத்தை பிரகாசமாக்கி, நிறத்தை மேம்படுத்தும். எனவே இன்ஸ்டன்ட் காபி பவுடரை பயன்படுத்துவது நல்லது.
3. தயிர் நல்லது தான் இருந்தாலும் எண்ணெய் பசை சருமம் அல்லது பருக்கள் இருந்தால், தயிரைத் தவிர்த்து, அதற்கு பதிலாக ரோஸ் வாட்டர் அல்லது சாதாரண தண்ணீர் பயன்படுத்தலாம். இல்லாதவர்கள் தயிரை பய்னடுத்துவது மிகுந்த நன்மை தரும்.
4.தக்காளியில் உள்ள லைகோபீன் சரும நிறத்தை மேம்படுத்தி, கருமையைக் குறைத்து, சருமத்தை பிரகாசமாக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |