எப்போதும் டீ குடிச்சுட்டு தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளவரா? அப்போ ஆபத்து நிச்சயம்
இந்தியாவில் மிக அதிகமாக அருந்தப்படும் ஒரு பானமாக டீ பார்க்கப்படுகிறது.
சிலர் நள்ளிரவில் எழுந்து கூட டீ குடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இன்னும் சிலருக்கு தேநீர் இல்லாமல் ஒருநாள் வாழ்வது கடினமாக இருக்கும்.
காலை முதல் இரவு வரை தேநீர் அருந்திக் கொண்டு வேலைச் செய்யும் ஆண்களை எமது வீடுகளில் பார்த்திருப்போம். உடலுக்கு டீ கொடுக்கும் உற்சாகத்தை உணவுகள் கூட கொடுக்காது என அவர்கள் நம்புகிறார்கள்.
தீவிர டீ பிரியர்கள் பலர் டீ குடித்த உடனே தண்ணீர் குடிப்பார்கள். இது குறித்து ஆய்வுகளில் தேடிப்பார்த்த போது, தேநீர் அருந்திய பிறகு தண்ணீர் குடிப்பது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும்..” எனக் கூறப்படுகிறது.
அப்படியாயின், டீ குடித்த பின்னர் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் விளைவுகளை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
உடனே தண்ணீர் குடிக்கலாமா?
சூடான உணவு சாப்பிட்ட பின்னர், குளிர்ச்சியான உணவை சாப்பிடுவது வயிற்றில் கோளாறுகளை ஏற்படுத்தும்.
அதே சமயம், நுரையீரலைப் பாதிக்கிறது, அத்துடன் சூடான டீ குடித்துவிட்டு தண்ணீர் குடிப்பதால் பற்களும் பாதிக்கப்படும். வாயின் வெப்பநிலையில் திடீர் மாற்றத்தால், பற்களின் நரம்புகளில் பாதிப்பு ஏற்படும்.
டீ குடித்த உடனே தண்ணீர் குடிப்பது அல்சர் பிரச்சனையை அதிகரிக்கும். நம்மிள் சிலர் அடிக்கடி டீ குடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு வயிற்றில் புண்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சூடான டீக்குப் பிறகு குளிர்ந்த நீர் குடிக்கும் பொழுது தொண்டை வலி, இருமல் மற்றும் சளி போன்ற பிரச்சினைகள் வரலாம். முடிந்தளவு தேநீர் அருந்திய உடனே தண்ணீர் அருந்தாமல், ஒரு அரை மணி நேரம் கழித்து தண்ணீர் குடிப்பது நல்லது. அவ்வளவு தாகமாக இருந்தால் டீ குடிப்பதற்கு முன் தண்ணீர் குடிப்பது நல்லது.
டீ அதிகம் குடிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு இரைப்பை பிரச்சினைகள் வரலாம். டீ அருந்தும் முன்னர் தண்ணீர் குடித்தால் வாயு தொல்லையும் இருக்காது. மாறாக அசிடிட்டி, கேன்சர், அல்சர் ஏற்படும் வாய்ப்பு குறையும்.
வெறும் வயிற்றுடன் டீ குடிக்கலாமா?
- காலையில் எழுந்தவுடன் பல் கூட துலக்காமல் டீ குடிக்கும் பொழுது பற் குழிகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பல்லின் எனமல் சேதமடையலாம்.
- பற்கள் மஞ்சள் நிறமாகவும், வயிற்றில் செரிமான பிரச்சினைகளும் ஏற்படும்.
- வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் வயிற்றில் அமிலத்தின் அளவு அதிகரித்து, செரிமான ஜூஸ் அளவை சீர்குலைக்கும். இது அஜீரணம், வீக்கம், மலச்சிக்கல், வாயு, கனத்த வயிறு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
- சிலருக்கு வயிற்றில் புண்கள் ஏற்பட்டு, புற்றுநோய் கூட ஏற்படுத்தும். எதையும் ஒரு அளவாக வைத்துக் கொள்வது சிறந்தது.
- வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் நம் உடலில் உள்ள நீர்ச்சத்து குறையும். ஏனெனின், டீயின் தன்மை டையூரிடிக் எனப்படுகிறது. இது உடலில் இருந்து தண்ணீரை சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது.
- சுமாராக 8 மணி நேரம் தூங்கும்போது, தண்ணீர் கூட குடிப்பதில்லை. இதனால் நீர்ச்சத்து குறைவாகவே இருக்கும். அப்போது டீ குடித்தால் இன்னும் நீர்ச்சத்து குறையும். காலப்போக்கில் நீர்ச்சத்து பற்றாக்குறையால் தலைசுற்றல், வாந்தி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |