புற்று நோயினால் உயிருக்கு போராடிய ஆறு வயது சிறுவனின் நெகிழ்ச்சி செயல்
இந்தியாவின் ஹைதராபாத் மாகாணத்தில் ஆறு வயது சிறுவன் ஒருவன் கொடிய புற்று நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் தருவாயில் தனது பெற்றோர், நோய் பற்றி தமக்கு தெரியும் என்பதனை அறிந்து கொள்ளக் கூடாது என மருத்துவரிடம் கேட்டுக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டாக்டர் சுதீர் குமார் என்ற நரம்பியல் மருத்துவ நிபுணர் இந்த சம்பவம் தொடர்பான விடயங்களை ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சிறுவன்
மானு என்ற ஆறு வயது சிறுவன் இவ்வாறு தனது தாய் தந்தையருக்கு நோயின் ஆபத்து நிலை தெரியக்கூடாது என மருத்துவரிடம் வேண்டியுள்ளார்.
தமக்கு புற்றுநோய் மிக ஆபத்தான வகையில் ஏற்பட்டுள்ளது என்பது தனக்குத் தெரியும் என்பதனை பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டாம் என குறித்த சிறுவன் மருத்துவரிடம் கோரியுள்ளார்.
இதேவேளை, தமது மகனுக்கு கொடிய புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாகவும் அது குறித்து அவர் அறிந்திருக்கவில்லை எனவும் எனவே நோய் பற்றிய விடயங்களை மகனுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் எனவும் பெற்றோரும் அதே மருத்துவரிடம் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகின்றது.
6-yr old to me: "Doctor, I have grade 4 cancer and will live only for 6 more months, don't tell my parents about this"
— Dr Sudhir Kumar MD DM?? (@hyderabaddoctor) January 4, 2023
1. It was another busy OPD, when a young couple walked in. They had a request "Manu is waiting outside. He has cancer, but we haven't disclosed that to him+
மருத்துவரின் கண்கலங்க வைத்த பதிவு
பானு என்ற சிறுவன் மூளை புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மருத்துவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். சிகிச்சைகளுக்காக சென்ற சிறுவனும் பெற்றோரும் மருத்துவ ஆலோசைனை பெற்றுக் கொண்டதன் பின்னர், சிறுவன் மருத்துவருடன் தனியாக பேச வேண்டும் என்று கூறியுள்ளார்.
பெற்றோரை வெளியே போக சொல்லி விட்டு மருத்துவர் உடன் உரையாடியுள்ளார்.
இதன்போது தனக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோயின் நிலைமைகள் பற்றிய சகல விபரங்களையும் ஐபேட் மூலம் தேடி அறிந்து கொண்டதாகவும் இன்னும் ஆறு மாதங்களுக்கு மேல் தாம் உயிரோடு இருக்கக்கூடிய வாய்ப்பு இல்லை எனவும் அவர் மருத்துவரிடம் கூறியுள்ளார்.
இந்த விடயம் தமது பெற்றோருக்கு தெரிந்தால் அவர்கள் கவலை அடைவார்கள் எனவும் அதனால் இந்த விடயத்தை பெற்றோரிடம் கூற வேண்டாம் எனவும் சிறுவன் மருத்துவரிடம் வேண்டியுள்ளார்.
எனினும் சிறுவனின் கோரிக்கையை மீறி புற்றுநோயின் ஆபத்து நிலைமையை மகன் அறிந்து கொண்டு உள்ளதாக பெற்றோருக்கு மருத்துவர் தெரியப்படுத்தியுள்ளார்.
உயிரிழந்த சோகம்
இந்த மிகவும் துயரமான இந்த விடயத்தை பெற்றோர் கையாள்வதற்கும் எஞ்சிய காலத்தை சரியான முறையில் பயன்படுத்தவும் உதவும் வகையிலேயே இந்த தகவல்களை வழங்கியதாக டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர், மானுவும் பெற்றோரும் குடும்பமாக ஒன்றிணைந்து சந்தோஷமாக காலத்தை கழித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
பணிகளில் இருந்து விடுமுறை எடுத்துக்கொண்டு மகனுடன் பல்வேறு இடங்களுக்குச் சென்று மகிழ்ந்துள்ளனர்.
மகன் புற்று நோயினால் இறந்ததனை தொடர்ந்து அந்த மருத்துவருக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்துள்ளனர்.
மருத்துவரின் ஆலோசனைக்கு அமையவே தாம் மகனின் இறுதித் தருணங்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்திட வழி அமைந்தது எனவும் அதற்காக தாம் நன்றி பாராட்டுவதாகவும் அந்த தம்பதியினர் மருத்துவரிடம் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பிலான தகவல்களை மருத்துவர் சுதீர் குமார் உருக்கமாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.