அப்பா இல்ல... கடன் வாங்கி அம்மா என்னை படிக்க வைத்தாங்க... - கண்கலங்கிய சிவகார்த்திகேயன்!
என் மாமாகிட்ட கடன் வாங்கி அம்மா என்னை படிக்க வைத்தாங்க என்று நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு நிகழ்ச்சியில் கண்கலங்கி பேசினார்.
நடிகர் சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிகர் மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும், பாடகராகவும், மிமிக்ரி கலைஞராக பல துறைகளில் பணியாற்றி வருகிறார். ஆரம்பத்தில் ஒரு சேனலில் மிமிக்ரி கலைஞராக நுழைந்த சிவகார்த்திகேயனுக்கு, ஒரு தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.
தொகுப்பாளரான சிவகார்த்திகேயனுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக அது இது எது நிகழ்ச்சிதான் சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்களை உருவாக்கி தந்தது.
இதனையடுத்து, விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்த சிவகார்த்திகேயன், தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இதன் பிறகு, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே உட்பட பல படங்களில் நடித்து முன்னணி நட்சத்திர நடிகராக மாறினார்.
கண் கலங்கிய சிவகார்த்திகேயன்
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
நடிகர் சூர்யா தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் கண்கலங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், என் அப்பா இல்லாதபோது நான் தான் இனி என் வாழ்க்கையை பார்க்க வேண்டும். அப்பா இறந்த பிறகு அம்மா என்னை படிக்க வைக்க பணம் கிடையாது. என் மாமாவிடம் தான் உதவி கேட்டாங்க.
என் மாமாகிட்ட கடன் கேட்டு என்னை படிக்க வைத்தாங்க. எனக்கு மாமா இருந்தாங்க. எனக்கு உதவி செய்து விட்டாங்க. நான் இப்போதான் சம்பாரிக்க ஆரம்பித்துள்ளேன். நான் இங்கு சம்பாதிக்கிற ஒரு 10 ஆயிரமாக இருந்தாலும், ஒரு மாணவரின் படிப்பு செலவுக்கு பீஸ் கட்டலாம் என்று தான் நான் இந்த நிகழ்ச்சி வந்தேன். நான் சம்பாதித்து விடுவேன் என்ற தன்னம்பிக்கை என்னிடம் உள்ளது என்று தழுதழுத்த குரலில் பேசினார்.