சிவகார்த்திகேயன் வீட்டில் அரங்கேறிய கொண்டாட்டம்: மகனுடன் வெளியிட்ட கலக்கல் புகைப்படம்
நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகனின் புகைப்படத்தினை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் லைக்ஸை குவித்து வருகின்றனர்.
நடிகர் சிவகார்த்திகேயன்
விடாமுயற்சி மேற்கொண்டால் வெற்றி நிச்சயம் என்பதை உண்மையாக்கி இன்று சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் நடிகர் சிவகார்த்திகேயன்.
இவர் ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்த நிலையில், இந்த தம்பதிகளுக்கு, ஆராதனா என்ற மகளும், குகன் தாஸ் என்ற மகனும் உள்ளனர்.
இவரது மகன் கடந்த 2021ம் ஆண்டு பிறந்த நிலையில், அவ்வப்போது தனது குழந்தைகளின் புகைப்படத்தினை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகின்றார்.
சமீபத்தில் இவரது மகன் வீரநடை போட்ட புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களிடம் லைக்ஸை குவித்தார். இந்நிலையில் தனது மகன் பிறந்தநாளான இன்று குடும்பத்துடன் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
இதனை அவதானித்த ரசிகர்கள் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். மேலும் சிவா நடித்த மாவீரன் திரைப்படம் வரும் 14ம் தேதி வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |