துளியளவும் பந்தா இல்லாமல் விசேஷத்தை கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. மகிழ்ச்சியில் குடும்பத்தினர்
நடிகர் சிவகார்த்திகேயன் அவருடைய மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் விசேஷத்தை கொண்டாடிய காணொளி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.
இவர், எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது திறமையை மாத்திரம் வெளிக்காட்டி தற்போது உச்சத்தில் இருக்கிறார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் அந்த வருடத்தின் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது.
இதனை தொடர்ந்து, மதராஸி, பராசக்தி ஆகிய இரண்டு படங்கள் பரபரப்பாக உருவாகி வருகின்றன.
விஷேசத்தில் வெளியான காணொளி
இந்த நிலையில், சிவகார்த்திகேயன் கடந்த 2010ம் ஆண்டு தன்னுடைய மாமன் மகள் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஆராதனா மற்றும் குகன் என ஒரு மகள் மற்றும் மகன் இருந்த நிலையில் கடந்த வருடம் 3வது மகன் பிறந்துள்ளார். அவருக்கு பவன் என பெயர் வைத்திருந்தார்.
சினிமாவில் இவ்வளவு பிசியாக இருந்தபோதிலும் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதையும் நடிகர் சிவகார்த்திகேயன் தவற விடுவதில்லை.
அந்த வகையில், அவர் தற்போது தன்னுடைய மனைவியுடன் 15 ஆவது திருமண நாளை மகள் மற்றும் மகன்களுடன் சந்தோஷமாக கொண்டாடியுள்ளார்.
இதன்போது வெளியிட்ட காணாளியில் ,“நீ எப்போதும் என்னுடையவனாக இருப்பாய்..” என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த காணொளியில் அவருடைய மனைவி மீதுள்ள காதலை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
இதனை பார்த்த ரசிகர்களும் தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |