Parasakthi Review: பராசக்தி திரைப்படம் எப்படி உள்ளது?
சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் பராசக்தி திரைப்படம் இன்று (10) திரைக்கு வந்துள்ளது. இந்த திரைப்படத்துக்கு ஆரம்பத்தில் இருந்த ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பார்ப்பு காணப்படது.
பராசக்தி திரைப்படம்
முழுக்க முழுக்க ஹிந்தி எதிர்ப்பு கதையை மையப்படுத்திய இந்தப் படம் 1964ல் நடப்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப காஸ்டியூம் வடிவமைப்பும் அட்டகாசமாகவுள்ளது.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் சிவகார்த்திகேயனின் 25ஆவது படம். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இது ஜிவி பிரகாஷிற்கு 100ஆவது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கதைகளம்
1960 கால கட்டங்களில் தமிழ்நாட்டில் நடைபெற்ற ஹிந்தி திணிப்பை எதிர்த்து போராடிய மாணவர்களை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. புறநானூறு என்ற மாணவர் படை எப்படி தமிழகத்தில் இந்து திணிப்பை எதிர்த்து போராடியது என்பதையே தீவிரமாக பராசக்தி படம் சொல்லி இருக்கின்றது.

அதில் சிவகார்த்திகேயன் புறநானூறு படையின் தலைவனாக காணப்படுகின்றார். படத்தின் தொடக்கத்திலேயே ஹிந்தி திணிப்பை எதிர்த்து ரயிலை எறிகின்றனர். அதே நேரத்தில் சிவகார்த்திகேயன் நண்பர் ஒருவர் இரயில் எரிப்பில் இறக்க, இனி இந்த வன்முறை, எதிர்ப்பு எல்லாம் வேண்டாம் என சிவகார்த்திகேயன் அனைத்தையும் கைவிடுட்டு ஆறு வருடங்களுக்கு அமைதியாக இருக்கின்றார்.
இந்த காலகட்டத்தில் அவரது தம்பியான அதர்வா ஹிந்தி திணிப்பை எதிர்த்து மாணவர்களை ஒன்று கூட்டி போராட்டம் நடத்துகிறார். இந்த மாணவர்களை எப்படியாவது அடக்க வேண்டும் என்று மத்திய அரசின் அதிகாரியாக வரும் ரவி மோகன் முடிவு செய்கிறார்.

மாணவர்களின் போராட்டத்தை கலவரமாக மாற்றி அவர்களை எப்படியாவது சுட்டு கொல்ல வேண்டும் என்று ரவி மோகன் முடிவு செய்கிறார் . இதற்காக அரசியல்வாதிகளையும், காவல்துறையையும் பயன்படுத்துக்கொள்ள நினைக்கின்றார்.
இறுதியில் அவரது எண்ணம் நிறைவேறியதா? தமிழகத்தில் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் எப்படி வெற்றிகரமாக முடிந்தது என்பதே இந்த படத்தின் கதையாக அமைகின்றது. இத்திரைப்படத்துக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு காணப்பட்ட நிலையில், எவ்வாறான விமர்சனங்கள் எழுத்துள்ளது என இந்த காணொளியில் காணலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |