பல விமர்சனங்களுக்கு பின் வாய் திறந்த சிவகார்த்திகேயன்.. என்ன சொன்னார் தெரியுமா?
“என்னை சில பேர் திட்டுறாங்க..” என பல நாட்களுக்கு பின்னர் சிவகார்த்திகேயன் வாய் திறந்து பேசியுள்ளார்.
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் சிவகார்த்திகேயன்.
இவர் ஆரம்பத்தில் பிரபல தொலைக்காட்சியொன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.
பின்னர் படவாய்ப்புகள் கிடைக்க படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு மார்க்கட்டை உருவாக்கி கொண்டார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டி. இமானின், “ சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்து விட்டார். குழந்தைகளின் எதிர்காலம் கருதி அதை எல்லாம் வெளியே சொல்ல முடியவில்லை. ஆனால், இந்த ஜென்மத்தில் இனிமேல் அவருடன் இணைந்து பணியாற்ற மாட்டேன்” என பேசியிருந்தார்.
என்ன சொன்னார் தெரியுமா?
இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பல சர்ச்சையான கருத்துக்கள் எழுந்தன.
இதற்கு மௌனம் காத்த சிவகார்த்திகேயனை பார்த்து, “ இது உண்மையா?” என மீடியாக்கள் கேட்டு வந்தன. ஆனால் பல சந்தர்ப்பங்களில் வாய் திறக்காத சிவகார்த்திகேயன் அயலான் இசைவெளியீட்டு விழாவில் வாய் திறந்து பேசியுள்ளார்.
அதில், “ பொங்கலுக்கு எத்தனை படங்கள் வந்தாலும் அந்த படங்கள் அடித்து துவம்சம் பண்ணட்டும். என்னை சிலர் சூப்பர்ன்னு சொல்வாங்க, சில பேரு இன்ஸ்பிரேஷன் சொல்லுவாங்க..
சில பேரு திட்டுவாங்க.. ஆனால், நான் இதையெல்லாம் எடுத்துக்குறதே இல்லை. என் ஹேட்டர்ஸை நான் ஒன்னுமே சொல்ல விரும்பல.. என்னை பிடித்தவர்களுக்காக நான் ஓடிக் கொண்டு தான் இருப்பேன்..” என சுருக்கமாக பேசி முடித்துள்ளார்.
இவர் இப்படி பேசியதில் “ஏதாவது உட்கருத்து உள்ளதா?” என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |