பட்டு போன்ற நீளமான கூந்தல் வேண்டுமா? அப்போ இந்த உணவுகளை மறக்காதீங்க
பொதுவாக ஆண், பெண் என இருபாலாரும் தலைமுடி ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது வழக்கம்.
நவீன வாழ்க்கை முறை, மன அழுத்தம், ஆரோக்கியம் குறைபாடு ஆகிய காரணங்களால் தலைமுடி பாதிப்படைகிறது.
இதனால் முடி உதிர்தல், பொடுகு, நரை முடி போன்ற பிரச்சனைகளை தினந்தினம் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது.
வெளியில் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் நாம் உணவில் அதனை கட்டுபடுத்த முடியும். ஆரோக்கியமான உணவு பழக்கங்கள் காரணமாக தலைமுடி தொடர்பான பிரச்சினையை கட்டுக்குள் வைக்கலாம்.
அந்த வகையில் தலைமுடி பிரச்சினையை விரட்டியடிக்கும் உணவுகள் பற்றி தொடர்ந்து பார்க்கலாம்.
தலைமுடி வளர்ச்சி
1. தலைமுடி பிரச்சினையிருப்பவர்கள் தினமும் காலையில் அவகோடா டோஸ்ட் செய்து சாப்பிடலாம். இந்த பழத்தில் ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் ஈ, சி ஆகிய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.இது கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவியாக இருக்கின்றது.
2. சால்மன் அல்லது ஏதேனும் உள்ளூர் இந்திய வகை மீன்களை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்வது அவசியம். மீனில் இருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் பளபளப்பான, வலுவான முடி இழைகளை பெற உதவியாக இருக்கின்றது. மதியம் தவறி விட்டால் இரவு வேளை உணவில் மீன் சேர்த்து கொள்ளலாம்.
3. தலைமுடிக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கீரைகள் கொடுக்கின்றது. அதாவது கீரையில் இரும்பு, ஃபோலேட் மற்றும் வைட்டமின்கள் ஏ மற்றும் சி ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. கீரைகளை சமைத்து உண்பதை விட பச்சையாக உணவில் சேர்த்து கொள்வது சிறந்தது.
4. புரதம், பயோட்டின் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் முட்டைகளில் இருக்கின்றன. இது உறுதியான கூந்தலை பெற உதவியாக இருக்கின்றது. இவ்வளவு சிறப்புக்கள் கொண்ட முட்டையை பொரியல், வேகவைத்து, ஆம்லெட் என பல வகைகளில் செய்து சாப்பிடலாம். மற்ற வேளைகளை விட காலையில் எடுத்து கொள்ளலாம்.
5. தலைமுடி பிரச்சினையிருப்பவர்கள் இனிப்பு உருளைக்கிழங்கு சாப்பிடலாம். ஏனெனின் உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ ஆக மாற்றும் பீட்டா-கரோட்டின் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகிய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. அத்துடன் தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை காய்கறிகளிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |