அபுதாபி ரேஸிங் டிராக்கில் அஜித் -சிவகார்த்திகேயன் சந்திப்பு! காணொளியை பாருங்க
அபுதாபியின் புகழ்பெற்ற யாஸ் மரினா சர்க்யூட்டில் அஜித்தைச் சந்தித்த திரைப்பிரபலங்களின் பட்டியலில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார்.குறித்த காணொளி தற்போது வெளியாகி இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
நடிகர் அஜித்குமார்
90களில் திரைக்கு வந்து இன்றுவரை தமிழ் சினிமாவில் நிலைத்திருக்கும் நடிகர் தான் அஜித்குமார். காதல் மன்னன், ஆக்ஷன் ஹீரோ, வில்லன் என பல வேடங்களில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகர்களில் ஒருவர்.

இவரை தல என்று ரசிகர்கள் செல்லமாக அழைத்து வருவகின்றனர். அஜித் நடிப்பில் இதுவரையில் 63 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.
அஜித் நடிப்பில் இறுதியாக "குட் பேட் அக்லி" (Good Bad Ugly) திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

அஜித் நடிக்கும் 64வது திரைப்படத்திற்கு AK 64 என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார், மேலும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது.இத்திரைப்பத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்கப்டும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நடிகர் அஜித் கார் ரேஸில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். அவரை பல பிரபலங்களும் நேரில் சென்று சந்தித்து வருகின்றனர்.

நயன்தாரா, அனிருத் என ஏராளமான பிரபலங்கள் ரேஸ் ட்ராக் சென்று அஜித்தை சந்தித்து வரும் நிலையில், இன்று நடிகர் சிவகார்த்திகேயன் அஜித் குமாரை துபாய் ரேஸ் ட்ராக்கில் சந்தித்துள்ளார். குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றது.
#SivaKarthikeyan at Yas Marina Circuit Abu Dhabi 🔥 @Akracingoffl @Siva_Kartikeyan @SureshChandraa @ymcofficial @DoneChannel1 #AjithKumarRacing #AjithKumar #SivaKartikeyan pic.twitter.com/KWjaXO4gST
— Done Channel (@DoneChannel1) February 7, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |