சிவகார்த்திகேயன், தனுஷிற்கு இந்த பிரச்சினையா? கருங்காலி மாலை அணிவதன் பின்னணி
பிரபலங்கள் பலரும் அணிந்து வரும் கருங்காலி மாலையின் பயன்களும், அணிவதற்கான காரணத்தையும் காணொளியில் தெரிந்து கொள்ளலாம்.
கருங்காலி மாலை
இன்று தனுஷ், சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ் போன்ற பிரபலங்கள் இந்த மாலையை அணிந்து வரும் நிலையில், ரசிகர்களும் இதனை விருப்பப்பட்டு அணிந்து வருகின்றனர்.
உடலில் நோய் தாக்கத்தை குறைப்பதுடன், ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் கருங்காலி மாலையை அணிகின்றனர்.
முன்னோர்கள் இந்த மரத்தின் கட்டையை பயன்படுத்தி கட்டில் செய்து பயன்படுத்தியதோடு, வீட்டில் இருக்கும் உலக்கையும் இந்த கருங்காலி மர கட்டையில் தான் செய்திருப்பார்களாம்.
உடம்பில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் உலக்கையை எடுத்து சில வைத்தியத்தை செய்து சரிசெய்வார்கள்.
யார் அணியலாம்? எப்பொழுது அணியக்கூடாது?
செவ்வாயின் சக்தி அதிகம் இருப்பதால் செவ்வாய்க்கு சாதகமான ராசிகள், நட்சத்திரங்கள் மட்டும் அணிய வேண்டுமாம்.
உடல் நலத்தில் பிரச்சினை இருப்பவர்கள் இதனை அணிந்து வந்தால் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
தெய்வீக குணம் கொண்டதாக கருதப்படும் இதனை 108 மணிகள் கொண்ட மாலையை அணிய வேண்டும்.
அசைவம் சாப்பிடும் நாளில் இதனை கழற்றி விடுவது நல்லதாம். பெண்கள் மாதவிடாய் நாட்களில் கழற்றி வைத்து விட்டு பின்பு அணிந்து கொள்ளலாம்.
ஒரு முறை மாலையை கழற்றி வைத்த பின்பு மீண்டும் அணியும் போது நீரில் நனைத்து, கழுவிய பின்பு அணிந்து கொள்ள வேண்டும்.
இறந்தவர்கள் வீட்டிற்கு செல்லும் போது இந்த மாலையை கழற்றி வைத்துச் செல்வது நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |