லைக் கொடுத்த பிரதீப்பிற்கு இப்படியொரு துரோகமா? முதலிடத்திற்கு சுயரூபத்தை காட்டிய ஜோவிகா
முதல் இடத்திற்கு பிக் பாஸில் இருக்கும் போட்டியாளர்கள் ஒருவரையொருவர் பயங்கரமாக சண்டையிட்டுக் கொள்கின்றனர்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் முதல் நபராக அனன்யா வெளியேற்றப்பட்டார்.
பின்பு பவா செல்லத்துரை வீட்டில் இருப்பது பிடிக்காமல் பிக்பாஸிலிருந்து வெளியேறினார். இரண்டு வீடாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரச்சினையும் இரண்டாகவே இருந்து வருகின்றது.
இந்த வாரத்திற்கான தலைவராக பூர்ணிமா இருந்து வருகின்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று தனது இடத்தினை தக்க வைத்துக்கொள்ள டாஸ்க் ஒன்றினை புதிதாக பிக் பாஸ் கொடுத்துள்ளார்.
இதில் பிரதீப் முதல் இடத்தை பிடித்துக்கொண்டுள்ளார். ஆனால் இதற்கு சக போட்டியாளர்கள் சண்டையிட்ட நிலையில், இரண்டாவது இடத்தை பிடித்திருந்த ஜோவிகாவும் முதல் இடத்திற்கு பிரதீப் உடன் உச்சக்கட்ட சண்டையில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதீப் கொடுத்த லைக்கிற்கு ஜோவிகா காட்டும் நன்றியா இது? என்று ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |