எலும்பும் தோலுமாக சிவகார்த்திகேயன்! வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி
பிரபல ரிவியில் தொகுப்பாளாராக அறிமுகமாகி பின்பு தனது திறமையினாலும், உழைப்பினாலும் இன்று நடிகராக வலம் வருபவர் தான் சிவகார்த்திகேயன். தற்போது பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்கும் இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளமாக உள்ளனர்.
தற்போது டாக்டர் மற்றும் அயலான் திரைப்படத்தில் நடித்து முடித்த இவர், டான் என்ற படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் பிறந்தநாள் விழா ஒன்றில் கலந்துகொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் உடல் எடையை மிகவும் குறைத்து எலும்பும் தோலுமாக மாறியுள்ளார்.
இதனைக் கண்ட ரசிகர்களின் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்ததோடு, மேலும் டான் படத்தில் கல்லூரி மாணவராக நடிப்பதால் இவ்வாறு எடையைக் குறைத்திருக்கின்றார் என்று தனக்குத்தானே சமாதானம் அடைந்துள்ளனர்.
