காதலியை கரம் பிடிக்கும் சிவாஜியின் பேரன் தர்ஷன்- குஷியில் குடும்பத்தினர்
சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் நீண்ட நாள் காதலியை கரம்பிடிக்கப்போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
சிவாஜி கணேசன் குடும்பம்
செவாலியர் விருது, பத்ம ஸ்ரீ விருது, பத்ம பூஷன் விருது, தாதாசாகெப் பால்கே விருது போன்ற பல விருதுகளை வாங்கி குவித்து பிரபலம் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
இவர், உறவுக்கார பெண்ணான கமலா என்பவர் கடந்த 1952ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, ராம்குமார், பிரபு என இரண்டு மகன்களும், சாந்தி, தேன்மொழி என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.
இதில், பிரபு தந்தை போன்று தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். தற்போதும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
குடும்பத்தின் அடுத்த வாரிசான பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவும் கும்கி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து நல்ல கதை அம்சம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
பேரன் திருமணம்
இந்த நிலையில், சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், இவருக்கு துஷ்யந்த் மற்றும் இரட்டைக் குழந்தைகளான தர்ஷன் மற்றும் ரிஷ்யன் என மூன்று மகன்கள் உள்ளனர்.
இதில், இவர்களில் ரிஷ்யன் வெளிநாட்டில் படித்து விட்டு அங்கேயே ஒரு நிறுவனத்தில் பணி புரிந்து வருவதாக சொல்லப்படுகிறது.
சினிமா மீது ஆர்வம் கொண்ட தர்ஷன் புனே திரைப்படக் கல்லூரி மற்றும் டெல்லி நேஷனல் ஸ்கூல் ஆஃப் ட்ராமா ஆகிய இடங்களில் பயிற்சி எடுத்துள்ளார். இவர் டெல்லியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அங்கு பூஜா என்கிற பெண்ணை காதலித்ததாகத் தெரிகிறது.
திருமண கொண்டாட்டம்
அதன் பின்னர், தர்ஷன் தனது பெற்றோரிடம் காதலை சொல்லிய நிலையில், டிசம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் எளிமையான முறையில் அன்னை இல்லத்தில் நடந்து முடிந்துள்ளது.
இதனை தொடர்ந்து, நாளை சென்னை கிண்டியிலுள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைபெற உள்ளது. பெண் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் மாப்பிள்ளை அழைப்பு, மெஹந்தி, சங்கீத் என நேற்றில் இருந்து திருமண கொண்டாட்டம் தொடங்கி உள்ளது.
திருமணம் நாளை காலை நடைபெற உள்ள நிலையில், நாளை மாலை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த சடங்குகளில், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மாத்திரம் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |