மார்டன் உடையில் கெத்தா வந்து நின்ற ஷிவாங்கி... - வைரலாகும் வீடியோ
மார்டன் உடையில் கெத்தா வந்து நின்ற ஷிவாங்கியின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
‘குக் வித் புகழ்’ ஷிவாங்கி
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானவர்தான் ஷிவாங்கி. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இதனையடுத்து, ‘குத் வித் கோமாளியில்’ தன்னுடைய நகைச்சுவையான திறமையால் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார். விஜய் டிவியில் கிடைத்த புகழ் மூலம் இவருக்கு வெள்ளித்திரையில் பாடவும், நடிக்கவும் வாய்ப்புகள் குவிந்தன.
இதனையடுத்து, ‘பசங்க’ படத்தில் வந்த அன்பாலே அழகான வீடு பாடல் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
இதன் பின்பு, ‘டான்’ படத்தில் சிவகார்த்திகேயனுடன், ஷிவாங்கி துணை நடிகையாக நடித்தார். பிறகு, வடிவேலுவின் ரீஎண்ட்ரி படமான ‘நாய்சேகர்’ படத்திலும் ஷிவாங்கி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வைரலாகும் வீடியோ
இந்நிலையில், ஷிவாங்கி தன் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், மார்டன் உடையில் மாஸாக போஸ் கொடுத்துள்ளார்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.