பொம்மை மாதிரி இருக்கீங்க! சிவாங்கியை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகிய சிவாங்கி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சிவாங்கி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் தான் சிவாங்கி. இந்நிகழ்ச்சியில் பாடகியாக அறிமுகமான இவருக்கு தற்போது அடுத்தடுத்து பல படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் முதல் மூன்று சீசன்களில் கோமாளியாகவும் கலக்கினார். குறித்த நிகழ்ச்சியின் 2வது சீசனில் சிறப்பு விருந்தினராக வந்த சிவகார்த்திகேயனுடன், பணியாற்ற ஆசைப்படுவதாக கூறிய சிவாங்கிக்கு, உடனே டான் படத்தின் மூலம் சினிமாவில் சிவகார்த்திகேயன் அறிமுகப்படுத்தினார்.
இப்படம் வெற்றியானதால் இதனைத் தொடர்ந்து வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், கண்ணன் இயக்கிய காசேதான் கடவுளடா போன்ற படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார்.
தற்போது யாரும் எதிர்பாராத நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக் ஆக எண்ட்ரி கொடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் டாப் 5 போட்டியாளர்களில் முதல் ஆளாகவும் சென்றுள்ளார்.
சிவாங்கியின் அசத்தல் புகைப்படம்
தற்போது சிவாங்கி ஸ்டைலிஷாக புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். அடுத்தடுத்து இவர் வெளியிட்டு வரும் புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் அவரைப் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.
உண்மையாகவே பார்பி பொம்மை போன்று இருப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
♥️? pic.twitter.com/Fh5kDpKNp9
— Sivaangi Krishnakumar (@sivaangi_k) June 18, 2023
This Barbie can cook! ?♥️ #cookwithcomali4 pic.twitter.com/hK8ihF6vop
— Sivaangi Krishnakumar (@sivaangi_k) June 20, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |