அண்ணனை கத்தியால் கூறுபோட்ட தங்கை! 8 ஆண்டுகளுக்கு பின்பு சிக்கியது எப்படி?
காதல் விவகாரத்தில் பெண் ஒருவர் தனது அண்ணனை கத்தியால் வெட்டி கூறுபோட்ட சம்பவம் 8 ஆண்டுகளுக்கு பின்பு வெளிவந்துள்ளது.
காதல் விவகாரம்
பெங்களூருவின் ஜிகானியில் இளைஞர் ஒருவரின் உடல் உறுப்புகள் பைகளில் அடைக்கப்பட்டு ஆங்காங்கே வீசப்பட்ட சம்பவம் 8 ஆண்டுகளுக்கு முன்பு அரங்கேறியது.
கொலை செய்யப்பட்ட இளைஞர் விஜயபுரா மாவட்டத்தைச் சேர்ந்த லிங்கராஜு. இவரையே சொந்த தங்கை தனது காதலருடன் சேர்ந்து இவ்வாறு வெட்டி கூறு போட்டுள்ளார்.
பாக்யஸ்ரீயுமு், சிவபுத்ராவும் கல்லூரி படிக்கும்போதே நண்பர்களாக இருந்த நிலையில், பின்பு காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டு பெங்களூரில் வாடகை வீடு ஒன்று எடுத்து வசித்ததுடன், தொழிற்சாலையில் வேலையும் செய்து வந்தனர்.
இந்நிலையில் ஒரு பாக்கியஸ்ரீயின் அண்ணன் லிங்கராஜு இவர்கள் இருக்கும் வீட்டிற்கு வந்து சண்டையிட்டுள்ளார். இதனால் இவர்களின் உறவு வெளியுலகிற்கு தெரியவரவே சண்டையும் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், காதலர்கள் இருவரும் சேர்ந்து லிங்கராஜுவை தாக்கி கொலை செய்ததுடன், அவரின் உடலை துண்டு துண்டாக வெட்டி பைகளில் அடைத்து ஏரி, குப்பை என ஆங்காங்கே வீசியுள்ளனர்.
பின்பு குறித்த ஜோடிகள் தங்களது அடையாளங்களை மாற்றிக்கொண்டு, வேறொரு பகுதியில் வசித்து வருவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் இருவரையும் பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது, குறித்த விபரங்கள் அனைத்தும் ஒப்புக்கொண்டுள்ளனர்.