விபத்தில் உயிரிழந்த அண்ணன்! போனில் அண்ணி செய்த காரியம்: பின்பு நடந்த கொடூரம்
அண்ணன் இறந்த நிலையில், அண்ணி அடிக்கடி தொலைப்பேசியில் அடுத்த நபரிடம் போனில் பேசியதால் ஆத்திரமடைந்த கொழுந்தன் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார்.
திருமணமான 4 ஆண்டில் இறந்த கணவர்
உத்திர பிரதேச மாநிலத்தில் காசியாபாத்தில் கான்பூர் கிராமத்தை சேர்ந்த கௌரவ் என்பவருக்கு 2017ல் ட்விங்கில் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.
இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலைியல், கடந்த 2021ம் ஆண்டு வாகன விபத்தில் கௌரவ் உயிரிழந்துள்ளார்.
கணவர் இறப்பிற்கு பின்பு ட்விங்கில் போனில் அடிக்கடி யாரிடமே பேசியுள்ளார். இதனை அவதானித்த மைத்துனர் அபிஷேக் அண்ணியை கண்டித்து புத்திமதி கூறியுள்ளார்.
போனில் மூழ்கிய அண்ணி
மைத்துனர் பேச்சை காதில் வாங்கிக்கொள்ளாத கௌரவ்வின் மனைவி போனில் பேசுவதை தொடர்ந்து செய்துள்ளார். சம்பவத்தன்று இரவு மாடியில் உள்ள தனது அறையில் ட்விங்கில் வேற்று நபரிடம் போன் பேசியுள்ளார்.
இதனை அவதானித்த மைத்துனர் அபிஷேக் கத்தியை எடுத்துக்கொண்டு ஆவேசமாக அண்ணியின் அறைக்கு சென்று சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்த ட்விங்கில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மைத்துனர் அபிஷேக் பொலிசில் சரணடைந்துள்ளார்.
அண்ணனின் இறப்பிற்கு அண்ணியின் நடத்தை சரியில்லாமல் போன ஆத்திரத்தில் இளைஞர் செய்த செயலால், தற்போது அண்ணின் 3 குழந்தைகள் அனாதையாக காணப்படுவது அவ்வூர் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.