பக்கத்து வீட்டில் தங்கையின் அலறல் சத்தம்: அவதானித்த 14 வயது சிறுவன் கண்ட பேரதிர்ச்சி! பின்பு நடந்தது என்ன?
தனது 6 வயது தங்கையை வன்கொடுமை செய்ய முயன்ற நபரை 14 வயது அண்ணன் பொலிசாரிடம் பிடித்துக் கொடுத்துள்ளது நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையின் ஜுஹு பகுதியில் வசித்து வரும் ஒரு தம்பதிக்கு 6 வயது மகளும், 14 வயது மகனும் இருக்கின்றனர். அந்த குழந்தைகளின் பெற்றோர் இருவரையும் தனியே விட்டு விட்டு தினமும் வேலைக்கு சென்று விடும் நிலையில், சிறுவர்கள் வீட்டில் இருந்து ரிவி பார்த்துக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த வாரம் அந்த வீட்டில் கேபிள் டிவி சரியாக வராததால், ஆறு வயது சிறுமி பக்கத்து வீட்டில் இருந்த 45 வயது நபரை சரிசெய்ய அழைத்துள்ளார்.
அப்போது குறித்த நபர் அந்த சிறுமியை ஒரு அறைக்குள் வைத்து வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அப்போது பயந்து போன சிறுமி கத்தி கூச்சல் போட்டுள்ளார்.
தங்கையின் அலறல் சத்தத்தைக் கேட்ட சிறுவன், அவரிடமிருந்து சிறுமியைக் காப்பாற்றி பின்பு தனது பெற்றோருக்கு போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார்.
அவர்கள் பின்பு பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். குறித்த சிறுவனின் செயலை பொலிசார் பாராட்டியுள்ளனர்.