நம்ம கார்த்தி மகளா இவங்க? இவ்ளோ பெருசா வளர்ந்துட்டாங்களே!
கார்த்தி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் சிறுத்தை. அதில் கார்த்தி ஒரு குழந்தைக்கு தந்தையாக நடித்திருப்பார்.
அதில் குழந்தையாக நடித்தவர் பேபி ரக்ஷனா. அதில் அவரது அருமையான நடிப்பும் க்யூட்டான ரியாக்ஷனும் இன்று வரையில் அனைவரையும் கவர்ந்ததாக காணப்படுகிறது.
சிறு குழந்தையாக பார்த்தவர், தற்போது வளர்ந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போயுள்ளார்.
தற்போது 11 ஆம் வகுப்பை நிறைவு செய்துவிட்டு 12ஆம் வகுப்புக்குச் செல்கிறாராம். சிறுத்தையைத் தொடர்ந்து கடல்,ஓகே கண்மணி, யாழ் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
ஆனால், அதனைத் தொடர்ந்து எந்தப் படத்திலும் கமிட் ஆகவில்லையாம். அதற்குக் காரணம், அவர் வளர்ந்து ஹீரோயினாக ஆக வேண்டுமாம்.
நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் கதாநாயகியாக என்ட்ரி கொடுக்கப் போகிறாராம். பக்கா தமிழ் நடிகையின் பேஸ் கட் இருப்பதால் நிச்சயம் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் இவரை போட்டி போட்டி படங்களில் புக் செய்வர் என்றும் கூறப்படுகிறது.