உங்க அம்மான்னு நினைச்சோம்! 15 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்துருக்காங்க பாருங்க
பிரபல தொகுப்பாளினியும், நடிகையுமாக புகழ்பெற்ற ரம்யா, தீவிரமான உடற்பயிற்சியின் மூலம் மிக ஒல்லியாக ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருக்கிறார்.
சின்னத்திரை மட்டுமின்றி ஓகே கண்மணி, கேம் ஓவர், ஆடை போன்ற படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா, அவ்வப்போது உடற்பயிற்சி தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.
அப்படி சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
அதாவது, 15 ஆண்டுகளுக்கு முன்னர் அவருடைய 16 வயதில் எடுத்த புகைப்படத்தையும், தற்போதைய புகைப்படத்தையும் ஒன்றிணைத்து வெளியிட்டார்.
இதைப்பார்த்த ரசிகர்கள், என்னவொரு மாற்றம் என புகழ்வதுடன், உங்கள் அம்மா என்று நினைத்துவிட்டோம் என கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.