சேஷுவின் மரணம் குறித்து பிரபல நடிகரின் வேதனை: வைரலாகும் வீடியோ
சேஷுவின் மரணம் குறித்து சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் செல்வம் மிக வேதனையுடன் பேசியுள்ள வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
சிறகடிக்க ஆசை செல்வம்
சமீபத்தில் இறந்துபோன நடிகர் சேஷுவின் மரணம் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் செல்வம் குறித்து பேசியுள்ளார்.
அவர் பேசும் போது 'கடந்த சில ஆண்டுகளாகவே காமெடி நடிகர்களாக இருப்பது மட்டுமின்றி பிற நடிகர்களும் பொதுமக்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை உடையவர்கள் வரிசையாக மரணம் அடைந்து கொண்டிருக்கிறார்கள்.
விவேக், மயில்சாமி, மனோபாலா, ஆகியவர்கள் நடிகர்கள் மட்டுமின்றி சமூக சேவைகளும் செய்து வந்த அனைவரும் இறந்து விடுகிறார்கள்.
இதையெல்லாம் பார்க்கும் போது ‘தர்மம் தலைகாக்கும் என்று சொல்வார்கள், இது உண்மை இல்லை என்னிடம் கேட்டால் இதை நான் பொய் என்று தான் சொல்வேன்.
விவேக், மயில்சாமி, மனோபாலாவை தொடர்ந்து தற்போது சேஷு அவர்களும் இறந்திருப்பதை பார்க்கும்போது வருத்தமாக உள்ளது.
சேஷு எத்தனையோ பேருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். அவர் உயிரோடு இருந்திருந்தால் இன்னும் எத்தனை கல்யாணம் வேண்டுமானாலும் செய்து வதை்திருப்பார்.
இவரின் இழப்பு எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது'. என செல்வம் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |