Siragadikka Aasai: கெட்டப்பை மொத்தமாக மாற்றிய விஜயா... அடுத்த பிசினஸ் என்ன தெரியுமா?
சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா தனது கெட்டப்பை மொத்தமாக மாற்றியுள்ள நிலையில், அடுத்து புதிய பிஸ்னஸ் ஒன்றினையும் தொடங்க இருக்கின்றார்.
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக சென்று கொண்டிருக்கின்றது. இந்த சீரியலில் பல சீக்ரெட்டை மறைத்து கதைகளம் சென்று கொண்டிருக்கின்றது.
மீனா முத்து இருவரும் தனக்கு வரும் இன்னல்களை அடுத்தடுத்த சமாளித்து வரும் நிலையில், தற்போது க்ரிஷ் ரோகினியின் பிரச்சனை சென்று கொண்டிருக்கின்றது.
க்ரிஷின் பாட்டி மருத்துவமனையிலிருந்து வெளியேறிய நிலையில், தற்போது விஜயாவின் கண்ணில் சிக்குவது போன்ற காட்சி வெளியாகியுள்ளது.
பின்பு மீனாவின் கண்ணில் க்ரிஷின் செருப்பு மாட்டிக்கொண்டு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது விஜயா தனது கெட்டப்பை மொத்தமாகவே மாற்றியுள்ளார்.
ஆம் யோகா வகுப்பு ஆரம்பிக்கப் போவதாக கூறி தனது ஸ்டைலை மாற்றி, அதனை புகைப்படம் எடுப்பதற்கு ஸ்ருதியை அழைக்கின்றார்.
ஆரம்பத்தில் அவரை மகிழ்வித்த ஸ்ருதி நேரம் ஆக ஆக விஜயாவை கலாய்த்து சிரிப்பினை அடக்காமல் இருக்கின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |