Siragadikka Aasai: துடிதுடிக்கும் மனோஜ் விஜயா! நடந்தது என்ன?
சிறகடிக்க ஆசை சீரியலில் எடையைக் குறைப்பதற்கு டயட்டை பின்தொடரும் விஜயா மற்றும் மனோஜ் இருவரும் வயிறு வலியால் துடிக்கும் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாகும். முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
இருவரும் கஷ்டப்பட்டு முன்னேற துடிக்கும் கதைகளமாகவும், கொடுமைக்கு மத்தியில் மாமியாருக்கு சிறந்த மருமகளாகவும் கதை செல்கின்றது.
சரியாக படிக்காத இவர்களின் அடுத்தடுத்த முன்னேற்றத்தை பார்த்து உடன்பிறந்த அண்ணனே பொறாமையில் பொங்கி வருகின்றார்.
ரோகினியின் முதல் திருமணம் மற்றும் குழந்தை க்ரிஷ் இந்த உண்மைகள் குடும்பத்தினருக்கு எப்பொழுது தெரியும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் விஜயா மனோஜ் இருவரும் உடல் எடையைக் குறைப்பதற்கு டயட் முறையை பின்பற்றி வந்துள்ளனர். இது ஒரு கட்டத்தில் உடல் உபாதையை ஏற்படுத்தி கடுமையான வயிறு வலியில் தவிக்கின்றனர்.
குறித்த வயிறுவலியிலிருந்து தப்பிக்கும் விஜயா தனக்கு இந்த டயட் எதுவும் வேண்டாம் என்று கதறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |