Siragadikka Aasai: மீனாவை சந்தித்த அருண்... சீதாவின் காதலுக்கு எதிராக நிற்கும் முத்து
சிறகடிக்க ஆசை சீரியலில் அருண் சீதாவின் காதலுக்கு முத்து எதிராக நிற்கும் நிலையில், மீனா செய்வது அறியாமல் தவித்து வருகின்றார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருக்கின்றது. முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
ரோகினி விஜயாவிடம் பொய்கூறி மாட்டிக் கொண்ட நிலையில், அவரை சமாதானப்படுத்த முயற்சித்து வருகின்றார். திருட்டு செயினை வாங்கி விஜயாவிற்கு கொடுத்து ரோகினி நல்லபெயர் பெற்றுள்ள நிலையில், சீதாவின் காதல் பூதாகரமாக வெடித்துள்ளது.
சீதா மற்றும் அருணின் காதலுக்கு முத்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஆனால் மீனாவிற்கு இந்த திருமணத்தில் சம்மதம் இருப்பது போன்று முத்துவிடம் பேசுகின்றார்.
ஆனால் முத்து இருவரின் திருமணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கின்றார். இதிலிருந்து மீனா எடுக்கும் முடிவு என்ன? இதனால் முத்து மீனா இடையே விரிசல் ஏற்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |