Siragadikka Aasai: நீயும், ஜீவாவும் Living-ல இருந்தீங்கள்ல... அவ Pregnant ஆனாளா? கொதிக்கும் ரோகினி
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி மருத்துவமனை பரிசோதனை முடிந்து வீட்டிற்கு வந்து மனோஜிடம் சரமாரியாக பேசியுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றது. அனைவரும் தங்களது வேலையில் பரபரப்பாக சென்று வருகின்றனர்.
மனோஜ் ரோகினி இருவரும் சற்று சறுக்கலை சந்தித்து வருவதுடன், மனோஜின் செயல் ரோகினிக்கு சற்று பயத்தினை ஏற்படுத்தியுள்ளது.
ரோகினி தனக்கு குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதா என்று சந்தேகத்தில் மருத்துவமனை சென்று பரிசோதனை செய்துள்ளார். அவருக்கு எந்தவொரு குறையும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் ரோகினி மருத்துவமனைக்கு வந்ததை சீதா மீனாவிற்கு கூறியதால், மீனா ரோகினி கர்ப்பமாக இருக்கின்றார் என்று தவறாக புரிந்து கொண்டு வீட்டில் உள்ள அனைவருக்கும் இனிப்பு செய்து கொடுத்துள்ளார்.
இந்நிலையில் வீட்டிற்கு வந்த ரோகினி மனோஜையும் பரிசோதனைக்கு அழைக்கின்றார். மனோஜ் பரிசோதனைக்கு வர விரும்பாமல் பேசியுள்ளார். உடனே கோபமடைந்த ரோகினி ஜீவா உடன் லிவிங்-ல இருந்தப்போ அவ கர்ப்பமானாளா? என்று கேள்வி எழுப்பி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |