கை கழுவிய தந்தை... திசைமாறிய வாழ்க்கை! சமந்தா உடைத்த உண்மை
நடிகை சமந்தா தனது வாழ்க்கை அப்பாவால் திசை மாறியதைக் கூறியுள்ளது தற்போது வைரலாகி வருகின்றது.
நடிகை சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ், தெலுங்கில் என பல ஹிட் படங்களில் நடித்த இவர் நடிகர் நாக சைதன்யாவைக் 2017ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமண வாழ்க்கை 2021ம் ஆண்டுக்கு பின்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். விவாகரத்திற்கு பின்பு சமந்தா அரிய வகை நோயாள மயோசிடிஸ் எனும் தசை அழற்சி நோயில் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றார்.
அவ்வப்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் அவர், தனது வாழ்நாளில் நடந்த சில சம்பவங்களை வெளிப்படையாக ரிவி நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.
கை கழுவிய தந்தை
அதாவது தனது தந்தை தனது கடனைத் திருப்பிச் செலுத்த மறுத்ததால் திரை வாழ்க்கைக்கு வந்ததாக கூறினார்.
அதாவது நடிகையாவது கனவா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு இந்த உண்மையைக் கூறியிருந்தார். அதாவத இவரது கடனை அவரது தந்தை திருப்பிச் செலுத்தமாட்டேன் என்று கூறியுள்ளாராம். இதனால் குடும்பத்தினரிடம் பணம் இல்லாததால் சினிமாவிற்கு கடனை அடைப்பதற்காகவே வந்துள்ளார்.
உன் கடனை என்னால் செலுத்த முடியாது' என்று என் தந்தை கூறிய அந்த தருணம் தான் என் வாழ்க்கையை மாற்றியது.” என்று தெரிவித்தார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |