siragadikka asai: ரோகிணி பார்த்த வேலையால் துடித்து போன மீனா.. வில்லத்தனத்தை காட்டும் நாத்தனார்
மீனா க்ரிஷுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என போராடுவதை பொறுத்துக் கொள்ள முடியாத ரோகிணி அவருக்கு பெரியதொரு வலியை கொடுத்திருக்கிறார்.
சிறகடிக்க ஆசை சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை.
இந்த சீரியலில் கோமதி பிரியா நாயகியாகவும், வெற்றி வசந்த் நாயகராகவும் நடித்து வருகிறார்கள்.
மூன்று மகன்களும், மூன்று மருமகள்களும் ஒரே குடும்பமாக வாழும் பிரச்சினைகளை கருவாக வைத்து சீரியல் நகர்த்தப்படுகிறது.
சீரியலில், மனோஜுற்கு பிடித்த அம்மாவாகவும், முத்துவை வெறுக்கும் அம்மாவும் கலக்கிக் கொண்டிருப்பவர் தான் விஜயா. பணத்தை மாத்திரம் மதித்து மீனாவை துன்புறுத்தி வருகிறார்.
நேரம் பார்த்து பழிவாங்கிய ரோகிணி
இந்த நிலையில், க்ரிஷை எப்படியாவது தன்னுடன் வைத்து வளர்க்க வேண்டும் என நினைக்கும் மீனா, ரோகிணியின் நண்பியான வித்யாவிடம் உதவிக் கேட்கிறார்.
வித்யா ரோகிணியிடம் சென்று அனைத்தையும் சொல்லி விடுகிறார். இதனால் தனக்கு தொடர்ந்து பிரச்சினைக் கொடுத்து கொண்டிருக்கும் மீனாவுக்கு பெரியதொரு வலியை கொடுக்க வேண்டும் என நினைத்து அவர் பூக்களை கொண்டு செல்லும் வண்டியை ஆட்களை வைத்து திருடுகிறார்.
தன்னுடைய வண்டியை தொலைத்த மீனா அடுத்து என்ன செய்வது என தெரியாமல் பறித்தவிப்பில் நிற்கிறார். இவ்வளவு பெரிய வேலையை பார்த்த ரோகிணி மகிழ்ச்சியுடன் வித்யாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |