Siragadikka Aasai: மீனாவிடம் உண்மைக் கதையை கூறிய ரோகினி... அடுத்து நடப்பது என்ன?
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி தனது வாழ்க்கையில் நடந்த அனைத்து சம்பவத்தையும் மீனாவிடம் கூறியுள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை சீரியல் இல்லத்தரசிகளை அதிகமாக கவர்ந்த சீரியலாக இருந்து வருகின்றது.
இதில் பல கதைகளம் சென்று கொண்டிருக்கின்றது. முத்து மீனா இருவரும் குடும்ப பிரச்சனைகளை அனுசரித்து கொண்டு செல்கின்றனர்.

மீனாவை வெறுத்து ஒதுக்கும் மாமியாரையும் சகித்துக் கொண்டு செல்கின்றார். இந்நிலையில் மீனாவிற்கு ரோகினியின் உண்மை தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி ரோகினி கூறிய உண்மையால் மீனா வீட்டு வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தவித்து தவறு செய்வதும், அனைவரிமும் திட்டு வாங்கவும் செய்கின்றார்.
Ethirneechal: மீண்டும் நீலாம்பரியாக வந்திறங்கிய அறிவுக்கரசி... வெறித்தனமான செயலால் ஆடிப்போன குடும்பம்
இந்நிலையில் ரோகினி தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மீனாவிடம் கூறி கதறி அழுதுள்ளார். ரோகினியின் நிலையினைக் கண்ட மீனா அடுத்து என்ன முடிவு எடுக்கப் போகின்றார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |