Siragadikka Aasai: ஆண் நண்பரை பார்க்க ஹோட்டலுக்கு சென்ற ரோகினி! மனோஜிடம் வசமாக சிக்கிய காட்சி
சிறகடிக்க ஆசை சீரியலில் ஆண் நண்பரை பார்க்க ரோகினி ஹோட்டலுக்கு சென்ற நிலையில், அவரை பின்தொடர்ந்து மனோஜ் வந்துள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், கதையும் மிகவும் சுவாரசியமாக சென்று வருகின்றது.
முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதையை மக்களும் விரும்பி அவதானித்து வருகின்றனர்.
வீட்டில் பொய் கூறி வாழ்ந்து வந்த ரோகினி தற்போது விஜயாவிடம் வசமாக மாட்டிக் கொண்டதால், மனோஜ் ரோகினி இருவரையும் விஜயா பிரித்து வைத்துள்ளார்.
மனோஜை தனது வழிக்கு கொண்டு வருவதற்கு ரோகினி ஆண் ஒருவரிடம் பழகுவது போன்று நடித்து வந்தார்.
ஆனால் தற்போது ஆண் நண்பரைப் பார்ப்பதற்கு ஹோட்டலுக்கே வந்துள்ளார். ரோகினியை பின்தொடர்ந்து மனோஜ் வந்த நிலையில், அவரிடம் ரோகினி வசமாக சிக்கியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |