Siragadikka Aasai: வில்லியின் சூழ்ச்சி வலையில் சிக்கிய மீனா... குழி பறிக்கும் விஜயா
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவிற்கு புதிய ஆர்டர் ஒன்று கிடைத்துள்ள நிலையில், இது வில்லி செய்த சதி என்பது ப்ரொமோவில் வெளியாகியுள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருக்கின்றது. முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து வாழ்க்கையை கொண்டு செல்லும் மீனாவை மாமியார் கொடுமை செய்கின்றார். ஆனால் கணவர் முத்து மீனாவிற்கு ஆறுதலாக இருந்து வருகின்றார்.
மீனா தனியாக தொழில் ஒன்றினை தொடங்கியுள்ள நிலையில், இதில் தொழில் போட்டி ஏற்பட்டு வருகின்றது. இதனை சமாளித்து வில்லியின் சதிதிட்டத்தை முறியடித்து வருகின்றார்.
ஆனால் தற்போது புதிய ஆர்டர் ஒன்று கிடைத்துள்ளதால், உச்சக்கட்ட மகிழ்ச்சியில் காணப்படுகின்றார். ஆனால் இது வில்லியன் சதி என்பதை அறியாமல் இருக்கின்றார்.
இந்த சதி விடயம் தற்போது விஜயாவிற்கும் தெரியவந்துள்ள நிலையில், அவரும் மீனாவை பழிவாங்குவதற்கு நேரம் பார்த்து வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |