Siragadikka Aasai: சீதாவின் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த முத்து! எதிர்பாராத திருப்பம்
சிறகடிக்க ஆசை சீரியலில் சீதாவின் காதலர் அருண் என்பதை அறிந்த முத்து கோபத்தின் உச்சத்திற்கே சென்று காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருக்கின்றது. முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
ரோகினி விஜயாவிடம் பொய்கூறி மாட்டிக் கொண்ட நிலையில், அவரை சமாதானப்படுத்த முயற்சித்து வருகின்றார். இந்நிலையில் சிட்டியிடம் திருட்டு செயின் என்று தெரியாமலேயே செயின் ஒன்றினை வாங்கி விஜயாவிற்கு கொடுத்துள்ளார்.
மற்றொரு புறம் சீதாவின் காதலரை அறிமுகப்படுத்த கோவிலுக்கு முத்து மீனாவை அழைத்துள்ளார். வந்ததும் காதலர் அருண் என்ற உண்மை அறிந்த முத்து கோபத்தின் உச்சத்திற்கு சென்றுள்ளார்.
பின்பு மீனாவின் அம்மாவை சந்தித்து சீதாவின் காதல் விடயத்தைக் கூறி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சீதாவிற்கு நல்ல மாப்பிள்ளை தானே பார்த்து திருமணம் செய்து வைப்பதாகவும் கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |