Siragadikka Aasai: பனியனுடன் கோபமாக கிளம்பிய முத்து! வெற்றியடைந்த சிட்டியின் மாஸ்டர் பிளான்
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து மீனாவின் திருமண நாள் கொண்டாட்டத்தில் சத்யாவால் முத்து கோபத்தில் பனியனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்களின் பேராதரவை பெற்று எப்பொழுதும் டிஆர்பியில் உச்சத்தில் இருப்பது தான் சிறகடிக்க ஆசை சீரியல்.
முத்து, மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த குடும்ப கதையாகும். இரண்டு மகன்கள் மீது பாசமாக இருக்கும் தாய்க்கு முத்துவை மட்டும் பிடிக்காமல் போயுள்ளது.
இதற்கான காரணத்தை சீரியல் தரப்பினர் சீக்ரெட்டாகவே வைத்துள்ளனர். மற்றொரு புறம் பூக்கடை நடத்திவரும் குடும்பம் தான் மீனாவின் குடும்பம்.
முத்துவிற்கும், மீனாவிற்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் நிகழ்வுகளை வெளியிட்டு வருகின்றனர்.
பலிவாங்கும் சத்யா
அம்மாவிற்கு பிடிக்காத பிள்ளையாக இருக்கும் முத்துவை அப்பாவிற்கு அதிகமாகவே பிடிக்கும். சமீபத்தில் மீனாவின் தம்பி சத்யா, முத்துவின் தம்பி மனைவி சுருதியின் தந்தை செய்த சதியால் பிரச்சினையில் சிக்கி, அதிலிருந்து மீனா மீட்டு வந்தார்.
இந்நிலையில் மனோஜ் ஜீவாவிடம் இருந்து பெறப்பட்ட பணத்தை வைத்து புதிய தொழில் ஆரம்பிக்கின்றார்.
இந்நிலையில் முத்துவின் முதல் திருமண நாள் வந்துள்ள நிலையில், அதனை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.
சிட்டியின் மாஸ்டர் பிளான் சத்யாவால் நிறைவேறியுள்ளது. மேலும் முத்து தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி வீசிவிட்டு பனியனுடன் சென்றுள்ளார்.
கடைசியில் மீனாவின் திருமண நாள் கொண்டாட்டம் முத்துவிற்கு எல்லையற்ற கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |