Siragadikka Aasai: மீண்டும் ஜீவாவை சந்தித்த முத்து... கொத்தாக மாட்டும் ரோகினி மனோஜ்
சிறகடிக்க ஆசை சீரியலில் இதுவரை மனோஜ் மற்றும் ரோகினி மறைத்து வைத்திருக்கும் ரகசியம் தற்போது அம்பலமாக உள்ளதாக ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முத்து மீனா இருவரின் நடிப்பிற்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளனர்.
மீனா முத்து இருவரும் பல தடைகளை தாண்டி தங்களது உழைப்பினால் மகிழ்ச்சியில் இருக்கும் நிலையில், தற்போது மனவருத்தம் ஏற்பட்டுள்ளது.
மீனா அதிகமாக சம்பாதிப்பதாக கூறிய வார்த்தை, முத்துவை புண்படுத்தியுள்ளது. பின்பு முத்து மீனாவை விட அதிகமான பணத்தை கொண்டு வந்து கொடுத்துள்ளார்.
பின்பு இருவரும் சமாதானம் ஆகியுள்ள நிலையில், தற்போது புதிய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. அதில் முத்து ஜீவாவை மீண்டும் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஜீவா வந்த இடத்தில் தான் ரோகினி மற்றும் மனோஜ் இருக்கின்றனர். தற்போது முத்துவிற்கு இந்த உண்மை ஜீவா மூலம் தெரியவருமா என்ற கேள்வி எழுந்துள்ளது..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |