Siragadikka Aasai: அனைத்து உண்மையும் அறிந்த மீனாவின் உயிருக்கு ஆபத்தா? பரபரப்பான ப்ரொமோ காட்சி
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினியின் முதல் திருமணம் மற்றும் மகன் தான் க்ரிஷ் என்ற உண்மையை அறிந்த மீனாவின் உயிருக்கு அடுத்து ஆபத்து வரப்போகின்றதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை. இதன் கதைக்களம் அனைவருக்கும் பிடித்துள்ள நிலையில், ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தையும் வைத்துள்ளது.
நடுத்தர குடும்பத்திலிருந்து மாமியார் வீட்டிற்கு வந்த பெண் சந்திக்கும் சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகள் இவற்றினை கதையாக சென்று கொண்டிருக்கின்றது.
முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவதாக மனோஜை திருமணம் செய்து ரோகினி மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில், இந்த உண்மை அனைத்தும் மீனாவிற்கு தெரியவந்துள்ளது.
உடனே ரோகினியின் கன்னத்தில் அறைந்துவிட்டு, அவரது அம்மாவை சத்தம் பேட்டுவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் உண்மை தெரியாத முத்து ரோகினியின் அம்மாவை முத்து தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

ரோகினியின் அம்மாவை பார்த்த மீனா கோபத்தின் உச்சத்திற்கு சென்றுள்ளார். நேற்றைய தினம் மனநலம் சரியில்லாமல் ஊருக்குள் சுற்றித்திரியும் நபர் மீனாவை இந்த ஊரில் இருக்காதே... ஊரை விட்டு கிளம்பு என்று அடிக்கடி கூறினார்.
இந்நிலையில் ரோகினியின் உண்மை தெரிந்ததால் மீனாவின் உயிருக்கே இங்கு ஆபத்து ஏற்படப்போகின்றதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |