Siragadikka Aasai: ரோகினி, க்ரிஷ் உண்மையை அறிந்த முத்து! ஆவலுடன் காத்திருந்த தருணம்
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவிற்கு தெரியாமல் இருந்த ரோகினி மற்றும் க்ரிஷ் உண்மைகள் தற்போது தெரியவந்துள்ளது கதையில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் இல்லத்தரசிகள் விரும்பி பார்க்கும் சீரியலாக இருக்கின்றது. முத்து மீனா இருவரைக் கொண்டு செல்லும் கதையில் பல உண்மைகள் மறைந்துள்ளது.
ரோகினி தனது முதல் திருமணத்தையும், குழந்தையையும் மறைத்து மனோஜை திருமணம் செய்துள்ள நிலையில், இந்த உண்மை சமீபத்தில் மீனாவிற்கு தெரியவந்துள்ளது.

ஆனால் தற்கொலை செய்வதாக ரோகினி மீனாவையும் மிரட்டி வைத்த நிலையில், தற்போது மீனா ஒருவாரம் கெடு கொடுத்துள்ளார்.
ஆனால் இதற்கு இடைப்பட்ட நேரத்தில் ரோகினி முன்னாள் கணவரின் அண்ணன் மற்றும் அண்ணி இருவரும் முத்துவைப் பார்த்து போட்டோ ஸ்டூடியோவிற்கு அழைத்துச் செல்லக் கூறியுள்ளனர்.
இதனால் முத்து அவர்களை அங்கு அழைத்துச் சென்றுள்ள நிலையில், அவர்கள் பிரிண்ட் செய்தது ரோகினியின் கல்யாண புகைப்படமாக இருந்துள்ளது.
இதனை அவதானித்த முத்து மிகப்பெரிய அதிர்ச்சியடைந்ததுடன், உடனே வீட்டிற்கு வந்து அனைவரையும் அழைக்கின்றார். இந்த உண்மை எப்பொழுது வீட்டிற்கு தெரியும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இந்த தருணம் தற்போது ப்ரொமோவாக வெளியாகியுள்ளது..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |