Siragadikka Aasai: கெத்து காட்டிய சிட்டி ஆட்களை புரட்டி எடுத்த முத்து... மனோஜால் தூங்காமல் தவித்த தெருநாய்
சிறகடிக்க ஆசை சீரியலில் ரவி வேலை செய்யும் ஹோட்டலுக்கு வந்த சிட்டியின் அடியாட்களை முத்து புரட்டி எடுத்து அனுப்பியுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த நடப்பது என்ன என்பதைக் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
சிட்டியின் அடியாட்கள் ரவி வேலை செய்யும் ஹோட்டலுக்கு வந்து அட்டகாசம் செய்துள்ளனர். உடனே ரவி முத்துவிற்கு போன் செய்து வரக்கூறியுள்ளார்.
உள்ளே வந்த முத்து ரவுடித்தனம் காட்டிய நபர்களை அடித்து துவைத்து அனுப்பியுள்ளார். இந்த ரவுடிகளை ஏற்பாடு செய்தது ஸ்ருதி அம்மா.. ஏனெனில் ஹோட்டல் ஓனர் பெண் ரவியிடம் நெருங்குவதை தடுப்பதற்கு இவ்வாறு செய்துள்ளாராம்.
மனோஜின் நண்பர் ஒருவர் கடைக்கு வந்து பள்ளி ஒன்றில் மனோஜை பேசுவதற்கு அழைத்துள்ளார். இதற்காக வீட்டில் பேசி பயிற்சி எடுப்பதாக கூறி குடும்பத்தினரை கொடுமைபடுத்தியுள்ளார்.
ஒரு கட்டத்தில் இவரது பேச்சு பயிற்சியினை சாலையில் படுத்திருந்த நாய் ஒன்று கேட்டு தனது தூக்கத்தை கெடுத்து மனோஜை பார்த்து குரைத்துக் கொண்டிருக்கின்றது.
இந்த நிகழ்வினை அவதானித்த குடும்பத்தினர் அனைவரும் சிரிப்பை அடக்க முடியாமல் இருக்கின்றனர். ஆனால் விஜயா மட்டும் தனது மகனுக்கு ஆதரவாக பேசிவருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |