siragadikka aasai: படுமோசமான முத்து.. யாரும் எதிர்பார்க்காத திருப்பம்- பேரானந்தத்தில் விஜயா
சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயாவின் ஆசைப்படி முத்துவின் நிலை பிச்சைக்காரன் அளவுக்கு சென்றுள்ளது.
சிறகடிக்க ஆசை சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை.
இந்த சீரியலில் கோமதி பிரியா நாயகியாகவும், வெற்றி வசந்த் நாயகராகவும் நடித்து வருகிறார்கள்.
மூன்று மகன்களும், மூன்று மருமகள்களும் ஒரே குடும்பமாக வாழும் பிரச்சினைகளை கருவாக வைத்து சீரியல் நகர்த்தப்படுகிறது.
சீரியலில், மனோஜுற்கு பிடித்த அம்மாவாகவும், முத்துவை வெறுக்கும் அம்மாவும் கலக்கிக் கொண்டிருப்பவர் தான் விஜயா. பணத்தை மாத்திரம் மதித்து மீனாவை துன்புறுத்தி வருகிறார்.
விஜயாவுக்காக புது கெட்டப்பில் முத்து
இந்த நிலையில், மீனாவின் தங்கைக்கு அவர் ஆசைப்படும் அருணை திருமணம் செய்து வைக்கக்கூடாது முத்து பிடிவாதமாக இருக்கிறார். ஆனால் சீதா ஆசைப்படுவதை எப்படியாவது செய்து வைத்து விட வேண்டும் என்ற முடிவில் மீனா இருக்கிறார்.
இப்படி சீரியல் ஒரு பக்கம் சென்றுக் கொண்டிருக்கையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் விஜயா முத்து பிச்சைக்காரன் வேடத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அதில் பிச்சைக்காரன் வேடத்தில் முத்து பிச்சை கேட்க, அதற்கு விஜயா அளவில்லாத மகிழ்ச்சியில் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த புகைப்படங்களை பார்த்த சின்னத்திரை ரசிகர்கள், “ இப்படி முத்துவை பார்ப்பது தானே ஆனந்தம்..” எனக் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |