அட இவரா? பிக்பாஸில் அதிரடி என்றிக் கொடுக்கும் பிரபலம்.. நீங்களே அசந்து போவீங்க
பிக்பாஸ் சீசன் 9-ல் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்களின் பட்டியல் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் 9
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாகும் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஒளிபரப்பபட்டு வருகிறது.
தமிழில் கடந்த எட்டு சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ஒன்பதாவது சீசனை ஆரம்பிக்கவுள்ளது. எந்தவித தொலை தொடர்பு வசதிகளும் இல்லாமல் சுமாராக 100 நாட்கள் கடந்து ஒரு வீட்டில் தன்னுடைய தனி திறமையை காட்டி விளையாட வேண்டும்.
இதுவரையில் தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், இடையில் சிம்பு தொகுத்து வந்தார்.
இதனை தொடர்ந்து கடந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்.
அட இவரா?
இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 9 இன்னும் சில நாட்களில் ஆரம்பமாகவுள்ளது. அதில், கலந்து மக்களை ஆரவாரப்படுத்தப்போகும் பிரபலங்களின் விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
அந்த வகையில், ஹார்ட் பீட் வெப்தொடரில் நடித்து பிரபலமான பாடினி குமார் கலந்து கொள்ளப்போகிறார். அதே தொடரில் சிறு வயது விஜய்யாக நடித்து வரும் ரோஷனும் தேர்வுச் செய்யப்பட்டிருக்கிறார்.
வழக்கமாக ஒவ்வொரு சீசனும் பெண்களை ஆதரவை பெற்று இறுதி வரை வரும் ஆண் போட்டியாளர் அல்லது பெண் போட்டியாளர் இருப்பார். அப்படியாயின் கடந்த சீசனில் சௌந்தர்யா மற்றும் விஷால் இருவரும் விளையாடினார்கள்.
இவர்களை போன்று இந்த சீசனில் பாடினி குமார்- ரோஷன் இருவரும் தான் பெண் ரசிகர்களின் ஆதரவை பெறுவார்கள் இறுதி வரை வருவார்கள் என இணையவாசிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |