விஜயாவின் ஆசைக்கு முட்டுக்கட்டையாக நிற்கும் முத்து.. வசமாக மாட்டிய வீடியோ ஆதாரம்
விஜயாவின் ஆசைக்கு முத்து வீடியோ ஆதாரத்தை காட்டி முட்டுக்கட்டை போட்டுள்ளார்.
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் தான் டிஆர்பியில் முதல் இடத்தில் தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள்.
குடும்பத்திற்குள் நடக்கும் குழப்பங்களை அடிப்படையாக கொண்டு நகர்த்தப்படும் இந்த சீரியலில், ரோகிணி எப்போது மாட்டுவார் என பலரும் எதிர்ப் பார்த்து வருகிறார்கள். இதுவே சிறகடிக்க ஆசை சீரியலின் கருவாக பார்க்கப்படுகிறது.
சுவாரசியத்திற்கு பஞ்சமே இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் கோமதி பிரியா கதாநாயகியாக நடித்து வருகிறார்.
ஏமாற்றத்தில் விஜயா
இந்த நிலையில், முத்து சிறுவயது முதல் தாயாக இருந்தும் கொடுமை செய்து வரும் விஜயா சமூகத்தில் உள்ளவர்களை ஏமாற்றி டாக்டர் பட்டம் வாங்க திட்டம் போடுகிறார்.
இதற்காக பொய்யான நிறைய விடயங்கள் செய்து அதனை காணொளியாக பதிவு செய்து வருகிறார். உதாரணமாக ரோகிணியின் மகன் க்ரிஷை தான் தத்தெடுத்து வளர்ப்பதாகவும் கூறி வந்தார்.
இந்த விடயத்தை பார்வதி மூலம் தெரிந்து கொண்ட முத்து இதற்கு சரியான பாடம் காட்ட வேண்டும் என நினைத்து, பிச்சைக்காரனை விஜயா அடிக்கும் காட்சியை காணொளியாக பதிவு செய்து பட்டம் கொடுப்பவரிடம் காட்டுகிறார்.
சமூக சேவை செய்வதாக கூறி மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறீர்களா? என பார்வதியின் நண்பியும் அந்த இடத்தை விட்டு செல்கிறார்கள். முத்துவின் இந்த செயலால் வீட்டில் என்னென்ன விடயங்கள் நடக்கப்போகிறது என்பதை காண சின்னத்திரை ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
