Siragadikka Aasai: வீட்டைவிட்டு வெளியேறும் நிலையில் மீனா! அண்ணாமலையின் உயிருக்கு ஆபத்தா?
சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து டுவிஸ்ட் ஒன்றினை சாமியார் அம்மா கூறியுள்ள நிலையில், ஒட்டுமொத்த குடும்பமும் பேரதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது அனைத்து உண்மைகளும் வெளியே வந்துள்ளது. ரோகினி மாமியாரை மட்டுமின்றி முத்து, மீனாவும் எதிரியாக நினைத்து வருகின்றார்.
அருண் சீதா பிரச்சனை ஒருவழியாக முடிவிற்கு வந்த நிலையில், தற்போது விஜயா வீட்டிற்கு சாமியார் அம்மா ஒருவரை அழைத்து வந்துள்ளார். வீட்டிற்கு வந்து அவர் பூஜை செய்து கொண்டிருக்கையில் மீனாவால் ஆபத்து என்று கூறியுள்ளார்.

மீனா வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் இல்லையென்றால் அண்ணாமலையின் உயிருக்கு ஆபத்து என்றும் கூறியுள்ளார். இதனால் கண்ணீருடன் பேரதிர்ச்சியில் மீனா காணப்படுகின்றார்.
மேலும் ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உள்ளனர். விஜயாவை சிந்தாமணி தான் இந்த சாமியாரிடம் அழைத்துச் சென்று இவ்வாறு நாடகம் போட வைத்திருப்பார் என்ற யூகமும் எழுந்துள்ளது.
சிந்தாமணி மற்றும் ரோகினியின் திட்டம் பழித்துவிடுமா? மீனா வீட்டைவிட்டு வெளியேறுவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |