Siragadikka Aasai: ரோகினியின் உண்மையை அறிந்த மீனா! பளார் என கன்னத்தில் அறைந்த தருணம்
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி ஏற்கனவே திருமணமானவர் என்பதும் க்ரிஷ் அவரது மகன் என்ற உண்மை மீனாவிற்கு தெரியவந்துள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை. இதன் கதைக்களம் அனைவருக்கும் பிடித்துள்ள நிலையில், ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தையும் வைத்துள்ளது.
நடுத்தர குடும்பத்திலிருந்து மாமியார் வீட்டிற்கு வந்த பெண் சந்திக்கும் சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகள் இவற்றினை கதையாக சென்று கொண்டிருக்கின்றது.

முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவதாக மனோஜை திருமணம் செய்து ரோகினி மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில், தற்போது அதற்கு சிக்கல் எழுந்துள்ளது.
தனது தந்தைக்கு திதி கொடுக்க கோவிலுக்கு வந்துள்ளார் ரோகினி. அப்பொழுது மீனாவும் குளத்தில் தண்ணீர் எடுப்பதற்காக வருகின்றார்.
அப்பொழுது ரோகினி தனது மகள் என்றும் அவருக்கு ஒரே ஒரு மகன் க்ரிஷ் என்றும் ஐயரிடம் கூறியுள்ளார். இதனை மீனா கேட்டு பயங்கர அதிர்ச்சியில் காணப்படுகின்றார்.
ஒரு கட்டத்தில் ரோகினியினை நேருக்கு நேர் சந்தித்த மீனா அவரை பளார் என கன்னத்தில் அறைந்துள்ளார். இதற்கு பின்பு கதையின் போக்கு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |